சைக்கிளின் ஒரே சக்கரத்தில் வலம் வரும் இளைஞர் !

0

கோவை காளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அருண். ஐ.டி.ஐ படித்த இவர் தற்போது மின் வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். 

சைக்கிளின் ஒரே சக்கரத்தில் வலம் வரும் இளைஞர் !
பள்ளி பருவத்தில் இருந்தே அருணுக்கு சைக்கிள் சாகசம் செய்வதில் அலாதி பிரியம். தினமும் பள்ளிக்கு சைக்கிளில் செல்லும் இவர் சாகசங்களை செய்ய பழகி இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் நீண்ட தூரம் ஒற்ற சக்கரத்திலேயே சைக்கிளை இயக்க முற்சித்துள்ளார். அது கைகூடிப் போனது. 

கருணைக்கிழங்கு கட்லெட் செய்வது

தினமும் வீட்டில் இருந்து பள்ளிக்கு சைக்கிளில் செல்லும் போது ஒற்ற சக்கர பயணம் தான் இதனை பார்த்த பொதுமக்களும், போக்குவரத்து போலீசாரும் சாலையில் வித்தை காட்டக் கூடாது என்று கூறி அனுப்பி யுள்ளனர்.

இது வித்தை அல்ல. வசதி படைத்தவர்கள் செய்யும் விளையாட்டு என்று கூறி தனக்கு விருப்பத்தை தெரிவிக்கவே, சிலர் அதற்கு தகுந்த இடத்திற்கு சென்று பயிற்சி எடுக்க அறிவுறுத்தி யுள்ளனர். 

மிடில் க்ளாஸ் குடும்பத்தில் இருக்கும் தன்னால் பயிற்சிக்கு செல்ல முடியாது என்று உணர்ந்த அவர், ஆள் நடமாட்டம் இல்லாத சாலைகளில் தனது தனித்திறனை வளர்த்துக் கொண்டுள்ளார்.

தற்போது சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று சைக்கிள் சாகசங்களை செய்து வருகிறார். கோவையில் 20 கிலோ மீட்டர் ஒற்றை சக்கரத்தில் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்று முனைப்புடன் பயிற்சி பெற்று வருகிறார் இந்த சாகசக்காரர்.

தனது பயணம் குறித்து பேசிய அருண், சைக்கிள் வீலிங் செய்வதால் பலரும் என்னை வீலிங் அருண் என்றே அழைக்க தொடங்கினார்கள். நான் கடந்த 20 ஆண்டுகளாக கின்னஸ் ரெக்கார் படைக்க முயற்சி செய்கிறேன். 

ஒற்றை சக்கரத்தில் 20 கிலோ மீட்டரை ஒரு மணி நேரத்தில் வந்தடைவதே எனது இலக்கு. இதுவும் ஒரு ஸ்போர்ட் தான். ஆனால் பலரும் வித்தை காட்டுவதாகவும், இடையூறு செய்வதாகவும் கருதுகிறார்கள்.

கொழுப்புக் கட்டியால் பிரச்சனை வருமா?
சைக்கிள் தான் நாம் ஓட்டிய முதல் வாகனம். இன்றைய இளைஞர்கள் சைக்கிள் மீது ஆர்வம் காட்டுவதில்லை. மேலும் பைக், கார் சாகசங்களை விரும்பத் தொடங்கி யுள்ளனர். 

பயிற்சி எடுக்கும் போது பலமுறை கீழே விழுந்து கை கால் முறிவு ஏற்பட்டுள்ளது. அதனால் எனது பெற்றோருக்கு இதில் உடன்பாடு இல்லை. இருந்த போதும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். 

ஒரு நல்ல சைக்கிள், ஹெல்மெட் இருந்தால் சில ஆண்டுகளுக்கு முன்பே கின்ன்ஸ் சாதனை நிகழ்த்திக் காட்டி யிருப்பேன் என தெரிவித்தார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings