பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட இருப்பதாக ஒரு சில ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ள நிலையில் இந்த செய்திக்கு பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்பு அதாவது பிளஸ் ஒன் பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் உண்மை இல்லை என்றும்
வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளிவந்து கொண்டிருக்கும் இந்த செய்தி பொய்யானது என்றும் பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்பட இருக்கும் நிலையில் திடீரென சமூக வலைதளங்களில் பிளஸ் 1 பொது தேர்வு ரத்து செய்யப்பட இருப்பதாக தகவல் பரவியதை அடுத்து பள்ளிக் கல்வித்துறை இந்த விளக்கத்தை அளித்துள்ளது.
11ஆம் வகுப்பு பொது தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன என்றாலும்,
இது குறித்து எந்த ஆலோசனையும் இதுவரை நடத்தப்பட வில்லை என்றும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Thanks for Your Comments