ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய கார்ப்பரேட் மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட தொழிலதிபர் பங்கஜ் ஓஸ்வால் மற்றும் அவரது மனைவி ராதிகா ஆகியோர் சுவிட்சர்லாந்தில் ஒரு ஆடம்பரமான பங்களாவை வாங்கி யுள்ளனர்.
இந்த சுவிஸ் எஸ்டேட்டை பங்கஜ் மற்றும் ராதிகா இருவரும் 200 மில்லியன் டாலர்களுக்கு வாங்கியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
அதாவது 1659 கோடி ரூபாய். இந்த வீடு முன்பு கிறிஸ்டினா ஓனாசிஸிடம் இருந்தது. கிறிஸ்டினா ஒரு கிரேக்க வணிக நபர் மற்றும் ஓனாசிஸ் குழுமத்தின் வாரிசும் ஆவார்.
ஓஸ்வால் குரூப் குளோபலின் உரிமையாளரான பங்கஜ் ஓஸ்வால், ஆஸ்திரேலியாவில் நீண்ட காலமாக வாழ்ந்து, அங்கு ஒரு பெரிய வணிக சாம்ராஜ்யத்தை நிறுவியிருந்தார்.
பங்கஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த பத்தாண்டுகளாக சுவிட்சர்லாந்தில் வசித்து வருகின்றனர்.
வீட்டின் சிறப்பு என்ன?
பங்கஜும் ராதிகாவும் இந்த பங்களாவுக்கு தங்கள் இரண்டு மகள்கள் வசுந்தரா மற்றும் ரித்தி ஆகியோரின் பெயர்களை இணைத்து வில்லா வரி எனப் பெயர் வைத்துள்ளனர்.
வீட்டிற்கு அதிக விலை கொடுத்ததோடு மட்டுமல்லாமல், இந்த ஜோடி அதன் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தை அழகுபடுத்துவதற்கும் நிறைய செலவழித்துள்ளது.
லீலா பேலஸ் ஹோட்டல், ஓபராய் ராஜ்விலாஸ் மற்றும் ஓபராய் உடைவிலாஸ் போன்ற ஹோட்டல்களை வடிவமைத்த ஜெஃப்ரி வில்க் என்ற வடிவமைப்பாளரால் வீட்டை வடிவமைத்துள்ளார்.
இந்த பங்களாவிலிருந்து பனி மூடிய மவுண்ட் பிளாங்க் மலையின் சிறந்த காட்சியைப் பார்க்கலாம்.
ஓஸ்வால் குடும்பத்திற்கு விலையுயர்ந்த வீடு மட்டுமல்ல, வீட்டோடு சேர்த்து, ஒரு தனிப்பட்ட ஜெட், ஒரு படகும் உள்ளது.
இதனுடன், பென்ட்லி மற்றும் லம்போர்கினி போன்ற சொகுசு ஸ்போர்ட்ஸ் கார்களையும் அக்குடும்பம் வைத்திருக்கிறது. பங்கஜ் மற்றும் ராதிகாவின் மகள் ரித்தி சுவிட்சர்லாந்தில் உள்ள லீ ரோசி என்ற உறைவிடப் பள்ளியில் படித்தார்.
இதுவே உலகின் மிக விலையுயர்ந்த பள்ளியாகும், இதன் ஆண்டு கட்டணம் ஒரு லட்சம் டாலர்கள் அதாவது 81 லட்சம் ரூபாய். உலக பணக்காரர்களின் குழந்தைகள் இப்பள்ளியில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அமெரிக்காவின் தொழிலதிபர் குடும்பமான ராக்ஃபெல்லர் குடும்பத்தின் குழந்தைகளைப் போலவே, நடிகை எலிசபெத் டெய்லரின் குழந்தைகள், பாடகர் ஜான் லெனனின் மகன் போன்றவர்கள் இங்கு படித்தவர்கள் தான்.
ஒவ்வொரு பருவத்திலும் அதன் வளாகத்தை மாற்றுவார்கள். இது மட்டுமின்றி இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களை மாணவர்கள் என்று அழைக்காமல் ரோசன்ஸ் என்று அழைக்கின்றனர்.
2020 ஆம் ஆண்டில், பங்கஜ் மற்றும் ராதிகா, பள்ளியில் உள்ள மற்ற குழந்தைகள் தங்கள் மகளை இந்தியர் என்பதற்காக கேலி செய்வதாக குற்றம் சாட்டினார்கள்.
இது அவரது மகளின் மனநலத்தை மோசமாக பாதித்தது. இது குறித்து புகார் அளித்தும் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார்.
ஆறு வருடங்கள் மகளுக்கு அந்தப் பள்ளியில் பாடம் சொல்லிக் கொடுத்து விட்டு, பின்னர் வெளியே அழைத்துச் சென்றார்கள் தம்பதியினர்.
மகள் பள்ளியில் படிக்காத ஆண்டுக்கான கட்டணத்தை பள்ளி தங்களுக்கு திருப்பி தர வேண்டும் என்பது தம்பதிகளின் கோரிக்கையாக இருந்தது.
2011 ஆம் ஆண்டில், பங்கஜ் ஓஸ்வால் பெர்த்தை தளமாகக் கொண்ட தனது நிறுவனமான பர்ரப் ஃபெர்டிலைசர்ஸின் நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார்.
நிறுவனத்தின் 115 மில்லியன் டாலர் அதாவது சுமார் ரூ.900 கோடியை தனது ஆடம்பர வாழ்க்கைக்கு பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அந்த நேரத்தில் இது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய கார்ப்பரேட் மோசடி என்று அழைக்கப்பட்டது.
Thanks for Your Comments