17 லட்சம் மதிப்பிலான பைக்கை வாங்கிய டிடிஎஃப் வாசன் !

0

தமிழகத்தில் பிரபலமான மோட்டோலாக் யூடியூபர் டிடிஎஃப் வாசன். சூப்பர் பைக்கில் விரும்பியான இவர் அதிவேகமாக பைக் ஓட்டி அடிக்கடி சர்ச்சையில் சிக்குவார். 

17 லட்சம் மதிப்பிலான பைக்கை வாங்கிய டிடிஎஃப் வாசன் !
இவர் மீது போலீசார் பல்வேறு வழக்குகளை கூட பதிவு செய்துள்ளனர். இருந்தாலும் யூட்யூபில் இவர் பிரபலமாகி இன்றைய இளைஞர்கள் பலரை இவரது ரசிகர்களாக மாற்றி வைத்துள்ளார். 

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் சுஸூகி நிறுவனத்தின் ஹயாபுஸா என்ற சூப்பர் பைக்கை வாங்கப் போவதாக அறிவித்தார். 

முட்டாள்களே சூழ்ச்சி செய்கிறார்கள்... விசுவாசமாக இரு விருந்தாக மாறி விடாதே !

இந்த பைக்கை அவர் புக் செய்வதற்காக சுஸூகி நிறுவனத்திற்கு சென்ற வீடியோவை கூட தனது youtube பக்கத்தில் வெளியிட்டிருந்தார். 

இந்த பைக்கை அவர் வாங்க போகிறார் என்ற செய்தி பரவியதுமே பல்வேறு விவாதங்கள் இது குறித்து எழுந்தது. 

இந்நிலையில் அவர் புக் செய்த சுசுகி ஹயாபுஸா ஜென் 3 பைக்கை தற்போது டெலிவரி எடுத்துள்ளதாக வீடியோ வெளியிட்டுள்ளார். 

இந்த வீடியோவில் அவர் தன் நண்பர்களுடன் காரில் கிளம்பி சென்று சுஸூகி ஹயாபுஸா பைக்கை டெலிவரி எடுத்து அதை ஓட்டி பார்த்ததை பதிவு செய்துள்ளார். 

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சுஸூகி ஹயாபுஸா பைக்கின் இன்ஜினை பொருத்தவரை தற்போது 1340 சிசி லிக்யூட் கூல்டு 5 சிலிண்டர் இன்ஜினை கொண்டது. 

இது அதிகமான பவர் மற்றும் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. 

இந்த பைக்கின் ஒட்டு மொத்த வடிவமைப்பு ரைடரின் போசிஷன் மற்றும் பைக்கின் பவர் ஆகியவற்றை மனதில் வைத்து வடிவமைக்கப் பட்டுள்ளது. 

இந்த பைக்கின் முன் பகுதியில் ஹெட்லைட் மட்டும் டர்னிங் சிக்னல் எல்இடியாகவும், பின்பக்க டெயில் லைட்டும் எல்இடியாக வடிவமைக்கப் பட்டுள்ளது. 

அருமையான மும்பை ஸ்டைல் சாண்ட்விச் செய்வது எப்படி?

இந்த பைக்கில் ஹெட்லைட்டுக்கு மேலே டூரிஸ்ங் ஸ்கிரீன் வழங்கப் பட்டுள்ளது. இதனால் பைக் வேகமாக சென்றாலும் ரைடர் முகத்தில் பைக் ஓட்ட தொந்தரவு செய்யும் வகையில் காற்று படாது. 

இந்த பைக்கில் பின்பக்க பில்லியன் ரைடர் சீட்டை மூடிக் கொள்ளும் வசதியும் இருக்கிறது. இந்த பைக்கின் பெட்ரோல் டேங்கில் டேங்க் பேட் வழங்கப் பட்டுள்ளது. 

இந்த பைக்கின் ரிம்களில் சிவப்பு மற்றும் தங்க நிற சுஸூகி லோகோ உடன் கூடிய டீக்கல்கள் பொருத்தப் பட்டுள்ளன. 

இந்த சுஸூகி ஹயாபுஸஆ பைக்கின் ரைடர் சீட்டுக்கும் பின் சீட்டிற்கும் இடையே, பின் சீட்டில் ஆள் இல்லாத போது பொருட்களை வைத்து கட்டிக் கொள்ள ஹுக்குகள் வழங்கப் பட்டுள்ளது. 

இந்த பைக்கில் பிரம்மோ ஸ்டைல்மா 4 பிஸ்டன் ஏபிஎஸ் ஆப்ஷன் கொண்ட பின் டிஸ்க் பிரேக் பொருத்தப் பட்டுள்ளது. பின்பக்க வீலில் மிஸ்ஸிங் ஒன் பிஸ்டன் சிங்கிள் டிஸ்க் ஏபிஎஸ் பிரேக் பொருத்தப் பட்டுள்ளது. 

சஸ்பென்ஷனை பொருத்தவரை முன்பக்க வீலில் தலைகீழாக பொருத்தப்பட்ட டெலஸ்கோபிக் ஆயில் டேம்ப்டு காயில் ஸ்பிரிங் பொருத்தப் பட்டுள்ளது. 

17 லட்சம் மதிப்பிலான பைக்கை வாங்கிய டிடிஎஃப் வாசன் !

பின்பக்கம் லிங்க் டைப் ஆயில் டேம்ப்டு காயில் ஸ்ப்ரிங் பொருத்தப் பட்டுள்ளது‌. இந்த பைக்கில் 125 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் இருக்கிறது. 1480 மில்லி மீட்டர் வீல் பேஸ் வழங்கப் பட்டுள்ளது. 

20 லிட்டர் அளவிலான பெட்ரோல் டேங்க் வழங்கப் பட்டுள்ளது. இந்த பைக்கின் எடை மொத்தம் 266 கிலோ. இந்த பைக் இந்தியாவில் 16.90 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. Video

இதில் முக்கியமான அம்சம் என்ன வென்றால் இந்த பைக் அதிகபட்சம் 299 கிலோ மீட்டர் வேகத்தில் சிறீப்பாயும். இந்த பைக் 0-100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 3.2 நொடியில் பிக்கப் செய்து விடும். 

நீங்க உண்மையிலேயே புத்திசாலியா? இந்த அறிகுறிகள் இருக்கா?

இந்த பைக் தான் தற்போது டிடிஎஃப் வாசன் வாங்கியுள்ளார். பல மாதங்கள் காத்திருந்து இந்த பைக்கை வாங்கியுள்ளார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings