சீரியலில் இணைந்து நடித்த போது காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை சம்யுக்தா நடிகர் விஷ்ணு காந்த் தங்கள் திருமணத்தை முறித்துக் கொண்டுள்ளனர்.
செந்தில் - ஸ்ரீஜா தொடங்கி, சித்தார்த் - ஸ்ரெயா வரை, சமீபத்தில் பலர் அப்படி ஒரே சீரியலில் நடித்து காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
அந்த வரிசையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து தொடர் மூலம் அறிமுகமாகி காதலிக்க தொடங்கினர் நடிகை சம்யுக்தா மற்றும் நடிகர் விஷ்ணுகாந்த்.
யூடியூபில் வெளியான நிறைமாத நிலவே தொடர் மூலம் பிரபலமானவர் நடிகை சம்யுக்தா. ஜீ தமிழில் வெளியான ரஜினி, கோகுலத்தில் சீதை ஆகிய சீரியல்களில் நடித்தவர் விஷ்ணுகாந்த்.
சிப்பிக்குள் முத்து தொடரில் இவர்கள் இணைந்து நடித்த போது காதலில் விழுந்தனர். சம்யுக்தா விஷ்ணுகாந்தின் ரொமான்டிக் புகைப்படங்கள் இணையத்தை ஆட்கொள்ளும். இவர்களுக்கு ரசிகர்களும் கூடினர்.
விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அறிவித்தனர். தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் தடபுடலாக நடந்தது இவர்களது திருமணம்.
இந்நிலையில், சமீபத்தில் இருவரது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இருந்தும் திருமணம் மற்றும் காதலித்த போது பதிவிட்ட புகைப்படங்கள், ரீல்கள், வீடியோக்களை இருவரும் அகற்றினர்.
இதனால் இவர்கள் இருவரும் பிரியவுள்ளதாக தகவல்கள் பரவின. மேலும் நடிகை சம்யுக்தா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் தனியே இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து, உனது திரிக்கப்பட்ட உண்மைக் கதைக்காக காத்திருக்கிறேன்.
சிரிப்பை விட அதிகமாக கண்ணீரை நீங்கள் பெரும் போது அந்த இடத்திலிருந்து விலகி விடுங்கள். ஒருவர் மீது கொண்ட அன்பிற்காக மட்டும் அனைத்தையும் சகித்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை.
ரூ13 கோடிக்கு மீன் விற்பனை - என்ன மீன் தெரியுமா?
என்பது போன்ற கேப்ஷன்களை பதிவிட்டார். இது அவர்களது பிரிவை இன்னும் உறுதிப் படுத்துவதாக இருந்தது.
மேலும் பதிவு ஒன்றில், மௌனங்கள் எதுவுமற்றது அல்ல. அதில் உண்மைகளும், பதில்களும் நிறைந்திருக்கும் என்று பதிவிட்டிருந்தார்.
இருவரும் பிரிந்து விட்டனர் எனவும், சம்யுக்தாவுக்கு திருமணம் மீறிய உறவு இருந்ததால் பிரிந்தனர் எனவும் கூறப்பட்டது.
விஷ்ணுகாந்த் அளித்த பேட்டி ஒன்றில் சம்யுக்தாவின் தந்தையால் தான் தாங்கள் பிரிந்தனர் என சந்தேகிப்பதாக தெரிவித்திருக்கிறார். கல்யாணம் ஆகி 15 நாள் தான் சேர்ந்து இருந்தோம்.
ஷூட்டிங் பிசி ல ரெண்டு பேருமே இருந்தோம் என்றார். தவிர, தன்னையும் தன் தாயையும் விட்டுச் சென்ற அப்பா எனக்கு வேண்டாம் எனக் கூறி வந்த சம்யுக்தா,
திடீரென அவரது பேச்சைக் கேட்க ஆரம்பித்தார் எனவும், கணவனை விட தன் தோழி தான் முக்கியம் எனக் கூறியதால் பிரச்னை வெடித்தது எனவும் விளக்க மளித்திருந்தார்.
இதய வால்வு பாதிப்புக்கு சிகிச்சை செய்வது !
இதற்கு பதிலளித்து லைவ் வீடியோவில் பேசிய சம்யுக்தா, விஷ்ணுகாந்த் மிகவும் கோபக்காரர் எனவும், பெண்கள் தனக்கு அடங்கிப் போக வேண்டும் என நினைக்கும் மனிதர் எனவும் குற்றம் சாட்டியிருந்தார்.
என்னோட எல்லா சுதந்திரத்தையும் பறிச்சாச்சு, என் ஆசை, கனவு எல்லத்தையும் நான் தியாகம் செய்து விட்டேன் எனக் கூறிய சம்யுக்தா, விஷ்ணுகாந்த் தன்னை சக மனிதனாக கூட நடத்தவில்லை எனவும் கூறியிருந்தார்.
மேலும், என் தோழி ஒரு lesbian, அதனால் நான் அவளிடம் கொஞ்சம் பார்த்து பழக வேண்டுமென என்னை எச்சரித்தார் விஷ்ணு.
நான் அவரை விட 10 வயது சின்ன பெண். என் வயதைக் கூட பொருட்படுத்தாமல், 24 மணி நேரமும் உடல் ரீதியாக அவரது தேவையை நான் பூர்த்தி செய்ய வேண்டும் என்று அவர் எதிர்பார்ப்பார்.
இணங்க மறுத்தால் அதற்கும் சண்டைக் கட்டுவார்.
யாரெல்லாம் உடற்பயிற்சி செய்யவே கூடாது? தெரியுமா?
திருமணம் செய்துகொள்ளப் போகும் அனைவரும் காதலிக்க வேண்டும். காதலித்து திருமணம் செய்யுங்கள், கடமைக்கு அல்ல எனவும் அந்த வீடியோவில் பேசியிருந்தார்.
இவர்கள் இருவரது வீடியோக்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Thanks for Your Comments