ஒடிசாவில் 3 ரயில்கள் விபத்தில் சிக்கியதால் பலர் உயிரிழந்துள்ள நிலையில், விபத்தில் தப்பிப் பிழைத்த ஒருவர், அங்கே என்ன நடந்தது என்பது குறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
அவர்களில் சுமார் 50 பேர் படுகாயமடைந்த நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அஞ்சப் படுகிறது.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட இரண்டு பயணிகள் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் மோதிய இந்த விபத்து நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உடலுக்கு கெடுதலை விளைவிக்கும் கொசுவர்த்தி சுருள்!
இந்த விபத்தில் தப்பிப் பிழைத்தவர்கள் அங்கே கண்ட காட்சி கொடூரமாக இருந்ததாகவே குறிப்பிடுகி றார்கள்.
இந்த விபத்தில் ஷாலிமார்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டு பயணிகள் ரயில்களும், சரக்கு ரயில் ஒன்றும் மோதின.
எப்போதும் இதில் பயணிகள் நிரம்பி வழியும். நேற்றும் இதில் விதிவிலக்கு இல்லை. தமிழ்நாட்டிற்கு வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலரும் இதில் வந்ததாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் இந்த ரயிலில் பயணித்தாக கூறப்படுகிறது. இதனிடையே ரயில் விபத்தில் சிக்கிய போது என்ன நடந்தது என்பது குறித்த தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார்.
அவர் கூறுகையில், விபத்து நடந்த உடன் அவ்வளவு தான் நான் உயிரிழந்து விட்டேன் என்றே நினைத்தேன். அந்தளவுக்கு அது கொடூரமாக இருந்தது.
கொல்கத்தா விலிருந்து சென்னைக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸில் நான் வந்தேன். அந்த ரயில் பாலசோர் அருகே வந்த போது தான் இந்த விபத்து நடந்தது.
B1 முதல் B4 பெட்டிகள் பாதிக்கப்பட வில்லை. B5 முதல் பல பெட்டிகள் தடம் புரண்டன. முதலில் அங்கே இருந்த தன்னார்வலர்கள் தான் உதவிக்கு வந்தனர். அப்போது அங்கே இருட்டாக இருந்து வெளிச்சமே இல்லை.
எங்களால் எதையும் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. நாங்கள் பயணித்த ரயிலில் இத்தனை பேர் உயிரிழந்துள்ளதை நினைத்தாலே பயமாக இருக்கிறது என்றார்.
நகம், முடி வெட்டும் போது வலிப்பது இல்லை.. ஏன் ?
அதே போல மற்றொரு பயணி கூறுகையில், ரயில் தடம் புரண்டதை நொடிகளில் உணர்ந்தோம். திடீரென புகை கிளம்பியது. முதலில் எங்களுக்கு என்ன நடந்தது என்றே புரியவில்லை.
நல்வாய்ப்பாக நான் வந்த கோச்சில் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. சிலருக்கு மட்டுமே காயங்கள் ஏற்பட்டது. முதலில் தன்னார்வலர்களின் உதவியுடன் முதியவர்களை வெளியே அழைத்து வந்தோம் என்றார்.
தடம் புரண்டதன் வேகத்தால் பல பயணிகள் தூக்கி எறியப் பட்டதாகவும் உயிர் பிழைத்த சிலர் தெரிவித்தனர். பெட்டிகள் கவிழ்ந்த நிலையில், அங்கிருந்து தவழ்ந்து வெளியேறும் போது, பல சடலங்களைப் பார்த்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
எல்லாம் நன்றாகவே சென்று கொண்டிருந்தது. அப்போது தான் இரவு திடீரென இந்த விபத்து நடந்தது. வெறும் 30-40 நொடிகளில் அனைத்தும் நடந்து முடிந்து விட்டது.
குழந்தைகளை உண்ணும் துரித உணவிலிருந்து காப்பாற்றுங்கள் !
சுற்றிலும் பல சடலங்கள். காயமடைந்த பலரை எங்களால் பார்க்க முடிந்தது. எனது வாழ்நாளிலேயே நான் இது போன்ற ஒரு கொடூர விபத்தைப் பார்த்தே இல்லை என்றார்.
இந்த விபத்தில் உயிர் பிழைத்தவர்கள் பத்திரமாக ஊர் திரும்ப மாற்று ஏற்பாடுகளும் ரயில்வே துறை சார்பில் செய்யப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Thanks for Your Comments