பாலத்தில் 360 டிகிரியில் 21 கேமிரா... பயம் இல்லாமல் போகலாம் !

0

தமிழகத்திலே நீளமான மதுரை- நத்தம் பறக்கும் மேம்பாலத்தில் நள்ளிரவில் வாகனஓட்டிகள் அச்சமின்றி பயணிக்க, 21 இடங்களில் 360 டிகிரியில் இயங்கும் தானியங்கி கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பாலத்தில் 360 டிகிரியில் 21 கேமிரா... பயம் இல்லாமல் போகலாம் !

மதுரை மாநகரில் ரூ.612 கோடியில் நத்தம் பறக்கும் மேம்பாலம் கடந்த ஏப்ரல் 8-ம் தேதி திறக்கப்பட்டது. இந்த மேம்பாலத்தின் கீழும், மேலும் எல்இடி மின்விளக்குகள் வைக்கப் பட்டுள்ளன. 

காதுகளை பராமரிப்பதில் அலட்சியம் வேண்டாம் !

அதனால், இரவு நேரத்தில் பாலம் முழுவதும் மின் ஒளியால் மிளிர்கின்றன. இந்த பாலத்தை 268 பிரம்மாண்டமான தூண்களைத் தாங்கி பிடிக்கின்றன. 

தமிழகத்திலே மிக நீளமான 7.3 கிலோ மீட்டர் தொலைவு வரை இந்த பாலம் செல்கிறது. நாராயணபுரம், திருப்பாலை ஆகிய இரு இடங்களில் பாலங்களில் இருந்து வாகன ஓட்டிகள் இறங்கிச் செல்லும் வசதி உள்ளது. 

மதுரை மாநகரில் இருந்து விஷால் டி மால் அருகே தொடங்கும் இந்த பாலம், ஊமச்சிகுளத்தில் உள்ள மாரணி விலக்கு வரை கட்டப் பட்டுள்ளது. 

ஊமச்சிக்குளம், நத்தம் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பும், தல்லா குளத்திலும் இறக்கும் வசதி உள்ளது. 

பாலம் மிக நீளமாக இருப்பதால் இந்த பாலத்தில் நள்ளிரவு பயணிக்க, வாகன ஒட்டிகள், அச்சமடைந்தனர். 

இரவு ரோந்து பணிக்கு மாநகர போக்குவரத்து போலீஸார், பெட்ரோல் போலீசார் வந்தும் பயணிகள் அச்சம் தீராததால் இரவு நேரத்தில் வாகனப் போக்குவரத்து இல்லாமல் இந்த பறக்கும் பாலம் வெறிச்சோடி காணப்பட்டது. 

இதையடுத்து, தற்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம், இந்த பறக்கும் பாலத்தில் 21 இடங்களில் 360 டிகிரி அளவில் சுழலும் தானியங்கி கேமிராக்களைப் பொறுத்தும் பணியை தொடங்கி யிருக்கிறது. 

தற்போது கேமிராக்களை தொழிலாளர்கள் பொருத்தி வருகின்றனர். தானியங்கி கேமிராக்கள், 360 டிகிரி சுழன்று, பாலத்தில் உள்ள காட்சிகளைச் சேமித்துக் கொள்ளும். 

நாடு முன்னேறுகிறதா, இல்லையா? ஜி.டி.பி என்றால்?

தேவைப்பட்டால் போக்குவரத்து போலீஸார், தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் அதிகாரிகள், அந்த கேமிரா பதிவுகளைப் பார்த்து விசாரிப்பார்கள். 

தேசிய நெடுஞ்சாலைத் துறையின் இந்த நடவடிக்கை, இரவில் பாலத்தில் பயணிக்க தயங்கும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சத்தைப் போக்கும் என எதிர் பார்க்கப் படுகிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings