திருவாரூர் மாவட்டத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் 8 ஆயிரம் சதுர அடியில், 46 அடி உயரத்தில் ரூ. 5 கோடியில் தன் தாய்க்கு கோவில் கட்டியுள்ளார் அமுர்தீன் என்பவர்.
திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் என்ற பகுதியைச் சேர்ந்தவர் அமுர்தீன். இவர் சென்னையில் பிரபல தொழிலதிபராக வலம் வருகிறார். இவர் 11 வயதாக இருக்கும் போது தந்தை அப்துல்காதர் உயிரிழந்தார்.
அதன்பின்னர், அவரது தாய் ஜெய்லானி பீவி தன் மகன் மற்றும் மகள்களை நன்றாக படிக்க வைத்து வாழ்க்கையில் முன்னேற உதவி உள்ளார்.
இதனால், தன் தாயின் மீது அதிகளவு பாசம் வைத்திருந்திருந்தார் அமுர்தீன். இந்த நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு வயது முதிர்வால் ஜெய்லானி பீவி உயிரிழந்தார்.
இதையடுத்து, தன் தாய்க்கு ஒரு நினைவில்லம் கட்ட முடிவெடுத்து, டெல்லியில் உள்ள தாஜ்மஹால் போன்று தன் தாய்க்கு ரூ. 5 கோடியில் நினைவில்லம் கட்டி, கடந்த ஜூன் 2 ஆம் தேதி இந்த நினைவில்லம் திறக்கப் பட்டுள்ளது.
இந்த நினைவில்லம், திருவாரூரில், ஒரு ஏக்கர் பரப்பளவில் 8 ஆயிரம் சதுர அடியில், 46 அடி உயரத்தில் ராஜஸ்தானில் இருந்து வரவழைக்கப் பட்ட வெள்ளைப் பளிங்குக் கற்களால் கட்டப் பட்டுள்ளது.
இது தென்னகத்தின் தாஜ்மஹால் என்று அழைக்கின்றனர்.
Thanks for Your Comments