நாட்டையே உலுக்கிய ஆருஷி கொலை வழக்கு... ஒரு பார்வை !

0

இந்தியாவை உலுக்கிய பல கொலை வழக்குகளில் 2008 ம் ஆண்டு நொய்டாவில் நடைபெற்ற இரட்டைக் கொலை வழக்கில்.. தீர்ப்பு வழங்கப் பட்டாலும்.. குற்றம் நிகழ்ந்த விதம்.. 

நாட்டையே உலுக்கிய ஆருஷி கொலை வழக்கு... ஒரு பார்வை !
காரணம், குற்றவாளிகள் பற்றிய முடிவு இன்று வரை தெரியாத மர்மமாகவே இருக்கிறது.. தமிழகத்தில் மட்டும் என்ன வாழுதாம்? என்று நினைப்பது புரிகிறது. இருந்தாலும் தெரிந்து கொள்வது நமது கடமை தானே,??

2008 ..மே …நடந்தது என்ன?

நொய்டாவில்.. ஜல் வாயு விஹார். ஒரு குடியிருப்பு வளாகம்.. அதில் தனித்தனியாக பல வீடுகள்.. பலரும் முன்னாள் ராணுவ வீரர்கள்… அதில் ராஜேஷ் தல்வார் அவரது மனைவி நுபுர் தல்வார்.. 

தங்களது ஒரே மகள் ஆருஷியுடன் L31 என்ற வீட்டில் வசித்தனர்.. நுபுர் தல்வாரின் தந்தை முன்னாள் ராணுவ கேப்டன்.. இவரது வீடும் அருகில் .(எனவே குழந்தையை கவனித்து கொள்வார்கள்)

இருவருமே டாக்டர்கள்.. இவர்களது கிளினிக்.. தனித்தனியாக வேறு இடத்தில்.. ராஜேஷுக்கு உதவியாக கிருஷ்ணா என்பவர்.. எனவே வீட்டில் இருக்கும் சிறு சிறு வேலைகளைச் செய்ய..ஹேம்ராஜ் ( வயது 45 ) என்ற ஒரு வேளையாள்.. 

சமையலுக்கு ஒரு பெண்.. பெயர் பாரதி மண்டல்.. பெரும்பாலும் இவர்கள் இருக்கும் போது..ஆருஷி பள்ளிக்கு ( 9ம் வகுப்பு) சென்று விடுவாள்.. பணிப்பெண் வரும் போது கதவை திறந்து விடுவது ஹேம்ராஜ் தான்.

சருமத்தில் அழற்சி ஏற்படுகிறதா? அதைப் போக்க சில வீட்டு வைத்தியங்கள் !

கதையை தொடங்குவதற்கு முன் அந்த வீட்டின் அமைப்பை சற்று பார்த்தால் நல்லது.. அது ஒரு தனி வீடு.. இரண்டு மாடிகள்..மேலே மொட்டை மாடி.. வாசல்.. திறந்தால் உள்ளே மற்றொரு இரும்பு கதவு.. 

வலது புறத்தில் மொட்டை மாடியை ஒட்டிய ஒரு சிறு அறை..அது வேலையாள் ஹேம்ராஜின் அறை..அதன் உள்ளேயே மற்றொரு கதவு..அதன் வழியாக ஹேம்ராஜ் வீட்டுக்குள் நேரடியாக செல்ல முடியும்.. 

உள்ளே நுழையாமல் வெளியே உள்ள படிக்கட்டுகள் வழியாக மொட்டை மாடிக்கும் செல்ல முடியும். உள்ளே நுழைந்ததும் வரவேற்பறை.. அதை ஒட்டி சாப்பாடு மேசை.. 

அப்படியே உள்ளே நுழைந்தால் ஒரு பக்கம் ஆருஷியின் அறை.. மற்றொரு பக்கத்தில் அவளது பெற்றோரின் அறை..

இவ்வளவு தெரிந்தால் போதும். அதோ மே 16 ..அதிகாலை ஆறு மணிக்கு சமையல்கார பெண் வருகிறார்.. பின்னால் நாமும் போவோம்..

அதிகாலை நேரத்தில் காத்திருந்த அதிர்ச்சி:

நாட்டையே உலுக்கிய ஆருஷி கொலை வழக்கு... ஒரு பார்வை !

பாரதி கதவை தட்டுகிறார்..வழக்கமாக வந்து கதவை திறக்கும் ஹேம் ராஜ் வரவில்லை.. ஹேம் ராஜுக்கு ஃபோன் செய்கிறார்.. 

ஒரு சில ரிங்.. ஆனால் உடனடியாக அது நிறுத்தப் பட்டது . மீண்டும் தட்டுகிறார்.. நுபுர் தல்வார் மாடியில் இருந்து எட்டிப் பார்த்து  என்னாச்சு?

கதவை திறக்கணும்.. ஹேம் ராஜை காணவில்லை.

பால் வாங்க போயிருக்கலாம்.. மேலேயிருந்து சாவியை வீச.. கதவை திறக்க.. அது ஏற்கனவே உட்புறம் பூட்டப்படவில்லை.. திறந்திருப்பது தெரிகிறது.. உள்ளே நுழைந்து.. தனது வேலைகளை ஆரம்பிக்கிறார்..

ஓ..ஓ..வென நுபுர் தல்வாரின் அழுகை சத்தம்..ஆருஷி அறையிலிருந்து.. ஓடிப் போய் பார்க்கும்போது.. பெற்றோர் இருவரும் உறைந்து போய் நிற்கிறார்கள்..

14 வயதே ஆன ஆருஷி தனது படுக்கையில்.. கழுத்து ஒரு பக்கம் திரும்பி.. ரத்தம் அறுபட்ட கழுத்திலிருந்து வெளியேறி.. தலையணை முழுவதும் நனைந்து படுக்கையையும் நனைத்திருந்தது.. 

தலையில் பலத்த காயம். முகம் .அவளது பள்ளிக்கூட பையால் மூடப்பட்டிருந்தது. ராஜேஷ் தல்வார்  ஹேம் ராஜ் தான் என் மகளைக் கொலை செய்து விட்டு ஓடி விட்டான்.

கோதுமை அடை செய்வது எப்படி?

பாரதி உடனே வெளியேறி பக்கத்தில் கூற அந்த அதிகாலை நேரம்..அப்பகுதி பரபரப்படைந்தது.. சிறிது நேரத்தில் அனைவரும் கூட.. 

காவல்துறை வர..அதற்கு முன்பே பலரும் உள்ளே நுழைந்து அவரவர் கால் தடங்கள், கைரேகைகள், குற்றம் நடந்த இடம் பாதுகாக்கப் படவில்லை என்பதே வேதனை..

இதை படித்த மருத்துவர்களான பெற்றோர் எப்படி அனுமதித்தனர்? 

காவல் துறையினர் வரும் போது நூற்றுக் கணக்கானோர் வீட்டில் அனைத்து இடங்களிலும் நுழைந்து.. தங்களது தடயங்களை, கை ரேகைகளை பதித்திருந்தார்கள்..

காவல் துறை விசாரணையில்:

காலை 6:50. காவல் துறையினர் மற்றும் தடயவியல் துறையினர் உள்ளே நுழைகிறார்கள்.. அனைத்தும் சேகரிக்கப் படுகின்றன..

மருத்துவரின் அறிக்கையில்..

நாட்டையே உலுக்கிய ஆருஷி கொலை வழக்கு... ஒரு பார்வை !
ஆருஷியின் பிறப்புறுப்பு திறந்திருந்தது.. அதில் வெள்ளை நிற திரவம் வெளியேறி யிருந்தது.. எனவே இது பாலியல் பலாத்காரமாக இருப்பதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது..

இதையே மற்றொரு மருத்துவர்  பிறப்புறுப்பு திறந்திருக்க வாய்ப்பேயில்லை.. கர்ப்பிணி பெண்கள் பரிசோதிக்கப்படும் போது.. வாயை விரிய வைப்பதற்காக உள்ள மருத்துவ கருவியை அதில் வைத்து.. 

அழுத்தினால் மட்டுமே இவ்வாறு விரிந்திருக்கும்.. அதே போல் வெண்மை நிற திரவம் என்பது ஒருவர் கொல்லப்படும் போதோ இறக்கும் போதோ.. மலம், சிறு நீர் வெளியேற வாய்ப்புகள் அதிகம்.. 

அதோடு பதினேழு வயது சிறுமிக்கு மாதவிடாய் வருவதற்கு முன் இது போல வெள்ளை படுதல் சாதாரணம்.. எனவே கொலை செய்யப் படும் போது வெளியேறி இருக்கலாம்..கொலை 15 ம் தேதி நள்ளிரவு நடந்திருக்கிறது..

ஆனால் ஹேம் ராஜ் எங்கே?? அவனது அறையில் இல்லை.. அவன் தான் கொலைகாரன் என்று தீர்மானித்தது காவல் துறை.. உடற்கூறு ஆய்வு முடிந்து.. ஆருஷியின் உடல் தகனத்துக்கு சென்றது. 

16ம் தேதி அனைத்தும் முடிந்ததும்.. மறுநாள் அங்கே வந்த காவல் துறையினர்.. மொட்டை மாடி செல்ல முடிவெடுத்தனர்.. நேற்று வந்த போது ஏன் இதைச் செய்ய வில்லை? 

கொலை நடந்தது ஒரு வீடு.. அதை சல்லடை போட்டு சலிக்க வேண்டிய காவல்துறை 17 ம் தேதி ஞானோதயம் வந்து.. படிக்கட்டுகள் வழியாக மேலே சென்றனர்.. 

காய்கறி கோதுமை போண்டா செய்வது எப்படி?

ஒரு சாதாரண மனிதனாக இருந்தால் கூட மேலே சென்று பார்க்க தோன்றியிருக்கும்.. அங்கே படிக்கட்டுகளில் ரத்தக்கறை இருந்ததாக சாட்சிகள் கூறினர். 

ஆனால் காவல் துறை கண்டு கொள்ளவில்லை என்றார் ஒருவர். மொட்டை மாடியில் இருந்த கதவு வேகமாக தள்ளியதும் திறந்து கொண்டது.. அங்கே கொலை செய்யப்பட்ட ஹேம் ராஜ் உடல்.. 

ஆனால் கொலை நடந்த இடம் அதுவல்ல.. வேறு எங்கிருந்தோ கொலை செய்து.. காலைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்ததற்கான தேய்த்து கொண்டு வந்த ரத்தக்கறை அடையாளங்கள்..

நாட்டையே உலுக்கிய ஆருஷி கொலை வழக்கு... ஒரு பார்வை !

ஆருஷியை கொலை செய்த அதே முறையில் இவரும் கொலை.. கழுத்து அதே மாதிரி அறுக்கப்பட்டு.. தலையில் பலத்த காயம்.. மற்றும் 25 காயங்கள் உடல் முழுவதும்..

காவல் துறை குழம்ப ஆரம்பித்தது.. வெளிப்புற கதவு உட்புறமாக தாளிடப்பட்டிருந்ததால் வெளியார் வந்திருக்க வாய்ப்பில்லை எனில் இது ஆருஷியின் பெற்றோர்.??. 

ஏன் இது ஆணவக் கொலையாக இருக்கக் கூடாது? அல்லது பழி தீர்த்துக் கொள்ள?? ஹேம் ராஜுக்கு எதிரிகள் யாரும் இல்லை.. எனவே இதை செய்தது தல்வார் தம்பதிகள் தான்..முடிவு செய்து..

விசாரணை வளையத்துள் தல்வார் தம்பதிகள்:

போலிசார் துருவ ஆரம்பித்தனர்.. அவர்களிடமிருந்து கிடைத்த தகவல் கீழே:. அன்று 15ம் தேதி இரவில்.. அவளுக்கு பிறந்த நாளுக்காக ஒரு கேமரா பரிசளித்தோம்.. 

பின் எங்கள் அறைக்கு சென்று விட்டோம்.. அங்கே சிறிது நேரம் கம்யூட்டரில் வேலை பார்த்து கொண்டிருந்தோம்.. அப்போது இன்டர்நெட் தடைபட்டதால் ஆருஷியின் தாய் ஆருஷி அறைக்கு வந்தார்.. 

அந்த அறையை உட்புறமாக தாளிட்டு விட்டால் வெளியிலிருந்து சாவி இன்றி திறக்க முடியாது..எனவே அவரிடம் இருந்த அந்த அறையின் சாவியை எடுத்து வந்து அவளது அறையில் இருந்த ரௌட்டரை ஆன்..ஆஃப் செய்கிறார். 

பின் திரும்பவும் தங்களது அறைக்கு வந்து சிறிது நேரம் வேலை பார்த்து கொண்டிருக்கும் போது மின்தடை ஏற்பட்டதால்..உறங்கச் சென்றோம்..

அது வரை குளிர் சாதனம் இயங்கி கொண்டிருந்ததால்.. அறை குளிர்ச்சியாக இருக்க..இரவில் என்ன நடந்தது என்பதை எங்களால் அறிய முடியவில்லை.

சிசிடிவி கேமராவில்.. நடந்த எதுவும் பதிவாகவில்லை.. அவர்களிடம் கேட்ட போது இரவில் மின்சாரம் துண்டிக்கப் பட்டது.. எனவே பதிவாகாமல் இருந்திருக்கலாம் .

நாக்கில் எச்சில் ஊறும் பூண்டு குழம்பு செய்வது எப்படி?

ஓகே.. ஆனால் மின்சார வாரியத்தில் அந்த நாளில் மின்சாரம் துண்டிக்கப் படவில்லை என்று கூறுகிறார்களே??. பதில் இல்லை.

மருத்துவ அறிக்கையில்  மழுங்கலான ஆனால் கடினமான ஆயுதத்தால் தலையில் தாக்கப் பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தது...

அறையில் தேடி பார்த்த போது.. கோல்ஃப் பந்தை அடித்து விளையாடும் ஸ்டிக்குகள் வைத்திருந்த அந்த பையில் 5ம் எண் கொண்ட அந்த ஸ்டிக்கை காணவில்லை..

எங்கே? என்று கேட்க அது காரில் இருக்கலாம். காரில் இல்லையே.... விளையாடச் செல்லும் போது வேறொரு காரில் செல்வோம் .அதில் இருக்கலாம்.

ஆனால் அது மொட்டை மாடியில் தட்டு முட்டு சாமான்களைப் போட்டு வைக்கும் அறையின். கூறையில் கண்டு பிடிக்கப் பட்டது.

பதில்?? டிரைவர் தெரியாமல் போட்டிருக்கலாம் 

ஆருஷியின் அறையை பூட்டி விட்டு தானே உங்கள் அறைக்கு சென்றீர்கள்? அந்த அறையை சாவியில்லாமல் உள்ளே இருப்பவர்கள் தவிர வேறு யாரும் திறக்க முடியாது.. 

பின் எப்படி அந்த அறையை திறந்து வெளியாள் உள்ளே வர முடியும்? இல்லை.. நான் வெளியே வரும் போது சாவியை மறந்து கதவிலேயே விட்டு விட்டு வந்து விட்டேன்.

கவனிக்கப்படாமல் இருக்கும் குழந்தைகள்:

நாட்டையே உலுக்கிய ஆருஷி கொலை வழக்கு... ஒரு பார்வை !

பொதுவாகவே ஆருஷியின் பெற்றோர் அந்த பெண்ணோடு நேரம் செலவிடுவ தில்லை என்று கூறப்படுகிறது. எனவே தனிமையில் இருந்த ஆருஷியிடம் அன்பாக பழகி அவளை தனது இச்சைக்கு பயன்படுத்தி இருக்கலாம்.. 

சம்பவம் நடந்த அன்று ஆருஷியின் அறைக்கு வந்த பெற்றோர் ஹேம் ராஜும் ஆருஷியும் சேர்ந்திருப்பதை பார்த்திருக்கலாம்.. 

அப்போது இந்த கொலை நடந்திருக்கலாம்.. கோல்ஃப் ஸ்டிக்கினால் இருவரது தலையிலும் தாக்கி இருக்கலாம்.. பின் கத்தியால் கழுத்தை அறுத்து இருவரையும் கொன்று விட்டு..தடயங்களை அழித்திருக்கலாம்.

பின் ஹேம்ராஜை படிக்கட்டுகள் வழியாக எடுத்துச் சென்று மொட்டை மாடியில் வீசியிருக்கலாம். ஹேம் ராஜின் ரத்தக்கறை படிந்த மெத்தை விரிப்பு மற்றும் சில கறைபடிந்த வை அருகிலுள்ள L 28 ன் மாடியில் வீசியிருக்கலாம்..

(அங்கே அவை கண்டு பிடிக்கப்பட்டன.) ஆனால் இதை தனியாக யாரும் செய்திருக்க முடியாது.. ஏன் தனது உதவியாளர் கிருஷ்ணாவின் உதவியை நாடியிருக்கக் கூடாது?

பாஸ்மதி தயிர் சாதம் செய்வது எப்படி?

பின் உதவியாளர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டார்.. நுபுர் தல்வார் குற்றம் நடந்த அன்று தான் அறைக்கு சென்ற போது வழக்கம் போல நாவல் படித்துக் கொண்டிருந்தாள்.. 

காலையில் எழுந்து பார்த்த போது தான் சாப்பாட்டு மேசையில்..மது பாட்டில்களை பார்த்தோம்..எனவே ஆருஷியை பார்ப்பதற்காக வந்த பிறகு தான் என் மகள் இறந்து கிடந்ததைப் பார்த்தோம். என்றார்.

எனவே வெளியில் இருந்து கிருஷ்ணாவும் அவன் நண்பர்களும் வந்து..மது அருந்தி விட்டு..ஆருஷியிடம் தகாத முறையில் நடந்திருக்கலாம்.. 

( ஏனெனில் ஹேம் ராஜின் ரத்தமோ.. அல்லது வேறு தடயங்களோ..டிஎன்ஏ சோதனையிலும்.. 

ஆருஷியின் அறையில் இருந்து எடுத்த மாதிரிகளிலும் எதுவும் கிடைக்கவில்லை என்று ஒரு அறிக்கை ஒரு தடயவியல் துறையால் சமர்ப்பிக்கப் பட்டிருந்தது.)

எனவே கிருஷ்ணா, அவரது நண்பர் ராஜ்குமார்.. மற்றும் அருகிலுள்ள வீட்டின் வேலையாள் விஜய் மண்டல் மூவரும் சேர்ந்து தவறான நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம். 

அப்போது ஆருஷி தகராறு செய்ததால் சத்தம் கேட்டு பெற்றோர் வந்து விடக் கூடாது என்று பயந்து மொட்டை மாடிக்கு சென்ற போது 

ஹேம் ராஜுடன் தகராறு ஏற்பட்டு அவனை கொலை செய்து விட்டு பின் கீழே இறங்கி ஆருஷியையும் இதே போல் கொன்றிருக் கிறார்கள். 

காவல் துறை சந்தேகத்தின் பேரில் இந்த மூவரையும் கைது செய்தது.. ஆனால் குற்றம் நடந்த அன்று அவர்கள் யாரும் உள்ளே வரவில்லை என்று அங்கிருந்த செக்யூரிட்டி சாட்சியம் அளித்தார்.. 

அவர் கடைசியாக பார்த்தது சுரேஷ் தல்வார் மட்டும் தான். அதோடு அனிதா துரானி என்ற பெண்ணோடு சுரேஷுக்கு தொடர்பு இருந்ததாகவும்.. 

ஆருஷி தன் தந்தையை கண்டித்ததாகவும்.. ஹேம் ராஜ் அவரை பிளாக் மெயில் செய்து மிரட்டியதால் தான் இந்த கொலை நடந்தது எனவும் பல்வேறு பத்திகைகள் ஊடகங்கள் தங்கள் திறமையை வெளிக்காட்டி, 

துப்பு துலக்கி கதை கதையாக வெளியிட்டு வேறு பல்வேறு வகைகளில் உண்மையை கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு சிக்கலாக்கி விட்டிருந்தன.

நீதி மன்றத்தை குழப்பிய விசாரணை அறிக்கைகள்:

இரு வேறு விசாரணை குழுக்கள் அளித்த வெவ்வேறு விதமான அறிக்கைகள்.. இரண்டு வெவ்வேறு விதமான சிபிஐ அறிக்கைகள்..

டாக்டர் மஹிந்தர் சிங் .. தடயவியல் நிபுணர்..

ஆருஷியின் அறையில் தலையணையில் ஹேம் ராஜ் ரத்தம் இயருந்ததாக கூறியிருந்தார்.. 

ஆனால் பிறகு ஹேம் ராஜ் அறை என்பதற்கு பதிலாக ஆருஷியின் அறை என்று தவறாக குறிப்பிட்டு விட்டோம்.. என்று அந்தர் பல்டி அடித்தார்.

கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறிய ஆயுதங்கள்..

நாட்டையே உலுக்கிய ஆருஷி கொலை வழக்கு... ஒரு பார்வை !
அதோடு கோல்ஃப் விளையாடும் மட்டையால் தலையில் அடித்திருக்க வேண்டும்.. ஏனெனில் இருவரது தலையிலும் U அல்லது V வடிவத்தில் காயம் இருந்தது..

(5 ஆம் எண்ணுள்ள அந்த மட்டை அலாய் மெட்டலால் செய்யப்பட்டது.. ஓங்கி அடித்தால் குறைந்தது 200 யார்டு தூரத்துக்கு பந்து செல்லும்..) 

ஆனால் மட்டை சந்தேகத்திற் கிடமான முறையில் கண்டெடுக்கப் பட்டும்.. அது தான் கொலைக்கான ஆயுதம் என்று நிரூபிக்கப்பட வில்லை.

இரண்டு நாட்கள் கழித்து தான் அதே வீட்டில் மொட்டை மாடியில் ஹேம் ராஜ் உடல் கண்டு பிடிக்கப்பட்ட போது.. ஏன் எந்த வித துர்நாற்றமும் வீசவில்லை?? 

மே மாதம்.. கடும் கோடை.. டெல்லி..நொய்டா கேட்கவே வேண்டாம்..எனவே இரண்டு நாட்களாக கடும் வெயில் இரவு நேர வெப்பம் இவற்றால் அவன் உடல் காயத் தொடங்கி இருந்தது.. 

பெட்ரோல் டேங்கில் தண்ணீர் புகுந்தால் என்ன தீர்வு !

அதோடு அவனது பிறப்புறுப்பு வீங்கிய நிலையில் இருந்தது.. வெயிலில் இருந்ததால் வீங்கி இருக்கலாம்.. 

அல்லது உடலுறவில் ஈடுபட்டிருக்கும் போது மரணித்ததால் வீங்கி யிருக்கலாம்.. என்ற இருவேறு அறிக்கைகள்..

141 பேர் விசாரணை செய்ய வேண்டிய நிலையில் வெறும் 39 பேர் மட்டுமே விசாரிக்கப்பட்டு அவசர கதியில் அறிக்கை சமர்ப்பிக்கப் பட்டிருந்தது..

நமக்கே இப்படி குழப்புகிறதே.. கோர்ட்டில் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு.. மாற்றி மாற்றி கூறி வாதாடினால் எப்படி இருக்கும்?

மரணித்த நீதி:

இவ்வாறு பல் வேறு குளறுபடிகள்.. பல்வேறு விதமான அறிக்கைகள்.. தடயங்கள் மற்றும் கொலைக்கான ஆயுதம் என எதையும் நிரூபிக்க தவறி இருந்தன.

எனவே நீதிமன்றம் 2017 அக்டோபர் 17அன்று கீழ் கண்டவாறு தீர்ப்பளித்தது. தல்வார் தம்பதிகள் கொலை செய்யவில்லை என்று நீதிமன்றம் கூறவில்லை. 

ஆனால் காவல் துறையின் மெத்தனம், மற்றும் சரியான தடயங்களை ஆதாரங்களோடு நிரூபிக்க தவறியமை, பல்வேறு விதமான அறிக்கைகள் என குற்றவாளி களையோ, 

குற்றம் செய்தவர் களையோ அல்லது குற்றம் நடந்த விதம்..அதற்கான காரணம், தடயங்களை முற்றிலுமாக அழித்திருந்தது என பல்வேறு விதமான சந்தேகங்களின் அடிப்படையில்,

இதை குற்றம் சாட்டப் பட்டோர்க்கு சாதகமாக்கி அவர்களை இந்த நீதிமன்றம் விடுதலை செய்கிறது..(ஏற்கனவே ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டிருந்தது).

கொசுறு: கொலை நடந்த பிறகு காணாமல் போன ஆருஷியின் கை பேசி பதினான்கு மாதங்கள் கழித்து.. முற்றிலும் அதில் தரவுகள் அழிக்கப்பட்ட நிலையில் கிடைத்தது.

சரியான சாட்சிகளும் பணம் கொடுத்தோ அல்லது மிரட்டப் பட்டோ பிறழ் சாட்சியாக மாறி இருந்தனர். பலர் வரவேயில்லை..

நாட்டையே உலுக்கிய ஆருஷி கொலை வழக்கு... ஒரு பார்வை !

எப்படியோ வாழ வேண்டிய ஒரு இரண்டும் கெட்டான் இளம் பெண்ணை தனது உயிரை இழந்த தோடு..நடத்தையை சந்தேகித்து உலகம் பேசும் அளவுக்கு மாறிப் போனது காலம் செய்த கொடூரம்..

விதியும் மதியும் சதி செய்து சாம்பல் உரமாக்கி.. வேம்பாய்.. முளைத்த ஆருஷி…

நம் பெண் குழந்தைகளை .. அரவணைத்து பாதுகாப்போம்.. அவர்களிடம் மனம் விட்டு பேசுவோம்..சரியோ தவறோ.. எது நடந்தாலும் பெற்றோரிடம் தயங்காமல் கூறலாம்.. 

அவர்கள் இருக்கிறார்கள்... நம்மை கைவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கையை விதைப்போம்..

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings