பாம்பு என்றால் படையே நடுங்கும் என்ற பழமொழி உள்ளது. ஆனால் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பாம்புகளோடு ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.
புனேவில் இருந்து 200 கிமீ தொலைவிலும், மும்பையில் இருந்து 350 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது ஷெட்பால் கிராமம்.
இந்த கிராமத்தில் வெறும் 2600 பேர் மட்டுமே வசிப்பதாக கூறப்படுகிறது. குறுகிய பாதைகள், சிறிய வீடுகள், பல வகையான பாம்புகள் என விஷயங்களை கொண்டுள்ளது இந்த கிராமம்.
தன் கணவர் படிக்கவில்லை என்று மட்டம் தட்டும் மனைவி
ஷெட்பால் கிராமத்தில் பல வகையான பாம்புகள் இருப்பதற்கான முக்கிய காரணம் இப்பகுதி வறண்ட மற்றும் சமவெளி பகுதியாகும். அதனால் இந்த பகுதி பாம்புகளின் இருப்பிடமாக மாறியுள்ளது.
இந்த கிராமத்தின் பள்ளிகளிலும், மக்கள் இருக்கும் வீடுகளிலும் பாம்புகள் சுதந்திரமாக சுற்றி வருகின்றன. குறிப்பாக இந்த கிராமத்தில் உள்ள மக்கள் பாம்புகளை தங்கள் வீட்டில் ஒருவராக கருதுகின்றனர்.
தெய்வமாக வணங்குகின்றனர். இதற்காக ஒவ்வொரு வீட்டிலும் பாம்புகள் ஒய்வெடுக்க தனியாக ஒரு மாடம் (அதாவது குழி போன்ற அமைப்பு) உள்ளது.
இந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள் பாம்புகளுடன் விளையாடுவதை வழக்கமாக கொண்டிருகின்றனர். ஷெட்பால் கிராமத்தில் சித்தேஸ்வரர் கோவில் உள்ளது.
மேலும் இதுவரை இந்த கிராமத்தில் பாம்பு கடியால் எந்த இறப்பும் பதிவாகவில்லை என கூறப்படுகின்றது.
போர்ன் (PORN) பற்றிய அறிவியல் உண்மை நல்லதா - கெட்டதா?
மனித வாழ்க்கை விதிமுறைகளை கடந்து பாம்புகளும் மனிதர்களும் ஒன்றாக வாழும் இந்த புதிய கலாச்சார வாழ்க்கையினை பார்க்கவும் சுற்றுலாவாசிகள் பலரும் வருகை தருகின்றனர்.
Thanks for Your Comments