சொந்தங்கள் வராத போது இருதிச்சடங்கு செய்த இமான் !

0

கல்வி உதவி செய்வதற்காக கடந்த 2020ல் டிரெஸ்ட் ஒண்ணு ஆரம்பிச்சேன். அப்புறம் மருத்துவ உதவிகளும் அவசியம்னு தெரிய வந்ததுச்சு. 

சொந்தங்கள் வராத போது இருதிச்சடங்கு செய்த இமான் !
இறந்து போன துணை நடிகர் பிரபுவை எனக்கு அறிமுகப் படுத்தினவர் சமூக சேவகர் உமா தான். ஆறு மாசத்துக்கு முன்னாடி அவரை எனக்கு அறிமுகப் படுத்தினாங்க. 

தங்குறதுக்கு வீடு வாசல் இல்லாமல் கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட்ல பிரபு படுத்திருந்திருக்கார். நடிகர் சங்கத்தில் துணை நடிகருக்கான உறுப்பினர் கார்டு, ஆதார் கார்டு உட்பட அவரது அடையாள அட்டைகள் பஸ் ஸ்டாண்டில் திருடு போயிருக்கு. 

உச்ச கட்ட கவர்ச்சி காட்டும் பூனம் பாஜ்வா - வாய் பிளந்த ரசிகர்கள் !

அதன் பிறகு அடையாளம் தெரியாத அளவுக்கு ஆளே மாறிப்போய், பஸ் ஸ்டாண்டிலேயே கிடந்திருக்கார். அப்பதான் அவர் சமூக சேவகர்கள் கண்ணுல பட்டிருக்கார். 

பிரபுவுக்குப் பூர்வீகம் பாண்டிச்சேரின்னு சொன்னாங்க. அவருக்கு அண்ணன் தம்பிகள் இருந்தும் யாரும் அவரோடு தொடர்பில் இல்லைன்னு அவங்களுக்குத் தெரிய வந்திருக்கு. 

பிரபுவோட நண்பர் பழனியப்பன் என்பவர் மூலமா, 'இவர் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் பிரபு, 'படிக்காதவன்' உட்பட, நிறைய படங்கள்ல நடிச்சவர்'னு உமாவுக்குத் தெரிய வந்தது.

பிரபுவை எனக்குத் தெரிய வந்ததும், அவரை மருத்துவ மனைக்கு அழைச்சிட்டுப் போனோம். ராமச்சந்திரா மருத்துவ மனையில் தான் அவரை அனுமதித்தோம். 

அங்கே அவருக்கு வாய்ப்புற்று நோய் இருக்கறது தெரியவந்துச்சு. அதுவும் நாலாவது கட்ட கேன்சர்னு சொல்லிட்டாங்க. கீமோ தெரபி கொடுத்துப் பார்க்கலாம். 

தொடர்ந்து சிகிச்சையில் இருந்தார்னா, அதிக பட்சம் இன்னும் ரெண்டு வருஷம் உயிரோடு இருப்பார்'னாங்க. 

ஏன்னா நாலாவது கட்டத்துக்குப் பிறகு என்ன தான் ட்ரீட்மென்ட் பண்ணினாலும் முற்றிலும் குணப்படுத்து வதற்கான சாத்தியம் இல்ல. 

அதனால இருக்கற வாழ்நாளை நீட்டிக்கலாம்னு நினைச்சு, கீமோ கொடுத்துப் பார்த்தாங்க. ஆரம்பத்துல அவரது உடல் கீமோ சிகிச்சைக்கு ஒத்துழைச்சது. ஆனால் அதன் பிறகு கீமோ பலனளிக்கல.

அவரது உடல் நிலை இன்னும் மோசமாச்சு. எனக்கு நேரம் கிடைக்கறப்ப ராமச்சந்திராவில் போய், பிரபுவைப் பார்த்துட்டு வருவேன். என் கூட உமாவும், பழனியப்பனும் வருவாங்க. 

ஏன்னா, பிரபுவுக்கு அங்கே பேச்சுத் துணைக்குக் கூட ஆளில்லாமல் அவதிப்பட்டார். இந்நிலையில் அவருக்கு கீமோ கொடுக்க ஆரம்பிச்சா, அதுவே அவரது உயிருக்கு ஆபத்தாகிடும்னு தெரிய வந்துச்சு. 

சரி, ஒரு ஹோம்ல வச்சு அவரைப் பார்த்துக்கலாம்னு நினைச்சோம். எனக்குத் தெரிஞ்ச 'நேத்ராலயா' ஹோம்ல அவரை சேர்க்கலாம்னு நினைச்சேன். 

ஆண்களைத் தாக்கும் இரைப்பை ஏற்றத்தால் சந்திக்கும் அபாயம் தெரியுமா?

அது உடல் ஊனம் மற்றும் பார்வையற்ற வர்களைப் பராமரித்து வரும் ஹோம் அது. நான் சொன்னதால, புற்றுநோயாளியால் அவதிப்பட்ட பிரபுவை அவங்க இல்லத்தில் சேர்த்து கவனிச்சுக் கிட்டாங்க. 

அங்கே ஒரு மாசம் இருந்திருப்பார். அதன் பிறகு ராமச்சந்திராவுக்கு சிகிச்சைக்கு அழைச்சிட்டுப் போகும் போது தான் கேன்சர் நோயாளிகளைப் பராமரிக்கும் இல்லமான 'ஜீவோதயா' பத்திச் சொன்னாங்க. 

அது ரெட் ஹில்ஸ் பக்கத்துல உள்ள மாத்தூர்ல இருந்தது. சகோதரி லலிதாதான் அதைப் பார்த்துக்கிறாங்க. அங்கேயே நிறைய கேன்சர் நோயாளிகள் இருக்காங்க. 

அவங்களோட இறுதிக் காலம் வரை அங்கேயே இருக்கலாம். அங்கே கொண்டு சேர்த்தோம். அங்கேயே அவர் மூணு மாசம் இருந்திருப்பார். அடிக்கடி அவரைப் போய்ப் பார்த்தோம்.

நேத்துக் காலையில அவர் தவறிட்டதாகச் செய்தி கேள்விப் பட்டதும், மனசு கஷ்டமாகிடுச்சு. உடனே நேத்ராலயாவில் உள்ள ஆட்களையும், உமா, பழனியப்பன் அவங்களையும் வரச் சொல்லிட்டு அங்கே போனேன். 

மொத்தமே அஞ்சு பேர்தான் போயிருந்தோம். அதுல ஒருத்தர் பார்வையற்றவர். அப்புறம் மாத்தூர்ல இருக்கற மயான பூமியிலேயே அவரது இறுதிச் சடங்கைப் பண்ணலாம்னு முடிவு செய்தோம். 

குண்டா இருந்தால் ஒல்லியாக காட்ட இதோ சில டிப்ஸ் !

பிரபு இந்து என்பதால் அவரது முறைப் படியே செய்ய நினைத்தோம். இறுதிச் சடங்கு முறைகளை எல்லாம் உமா செய்தாங்க.

சொந்தங்கள் வராத போது இருதிச்சடங்கு செய்த இமான் !

கடந்த ஆறு மாசமா, பிரபுவை நான் தான் கவனிச்சிட்டிருக்கேன். இந்த ஆறு மாசத்துல அவரை விசாரிச்சு, ஒருத்தர் கிட்ட இருந்து கூட எனக்கு எந்த போனும் வந்ததில்ல. 

அவர் மருத்துவமனை, ஹோம்னு இருந்தப்ப கூட யாரும், அவரின் நண்பர்கள்னு சொல்லி வந்து நலம் விசாரிச்சதில்ல. யாருக்குமே இப்படி ஒரு நிலை வரக்கூடாது. 

பிரபுவை நல்ல முறையில் அவரது சம்பிரதாயத்தோடு இறுதி அஞ்சலியும் மரியாதையும் செலுத்திட்டோம். 

குளிர்ச்சியான அறையில் தூங்குவது நல்லதா தெரியுமா?

அவர் வலியும் வேதனையுமா இருந்து கஷ்டப் படுறதை விட, அவர் இறந்தது ஒரு விதத்துல அவருக்கு நல்லதுன்னு தான் நினைக்க வேண்டியிருக்கு - கண்களில் ஈரம் கசிய துயரில் ஆழ்கிறார் இமான்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings