டிவிஎஸ் பைக்கில் சிறுவனுக்கு இவ்வளவு வேகம் ஆகாது !

0

வயதான ஒருவரை பின்னால் அமர்த்தி கொண்டு சிறுவன் ஒருவன் அதிவேகமாக டிவிஎஸ் எக்ஸ்.எல் (TVS XL) பைக்கை ஓட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. யார் இந்த சிறுவன்? 

டிவிஎஸ் பைக்கில் சிறுவனுக்கு இவ்வளவு வேகம் ஆகாது !
குறைந்த வயதில் வாகனங்களை இயக்குவோரின் எண்ணிக்கை நம் நாட்டில் அதிகமாக உள்ளதை கூறியே ஆக வேண்டும். 

இந்த வரிசையில் தற்போது, டிவிஎஸ் எக்ஸ்.எல் பைக்கில் சிறுவன் ஒருவன் தனது பாட்டியை அழைத்து சென்றுள்ளான். இது குறித்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியிடப் பட்டுள்ளது. 

மிக்ஸ்டு ஃப்ரூட் தோசை செய்வது எப்படி?

இந்த வீடியோவை, சம்பவத்தின் போது அந்த எக்ஸ்.எல் பைக்கிற்கு அருகில் சென்ற மற்றொரு வாகன ஓட்டி தனது மொபைல் போனில் காட்சிப்படுத்தி உள்ளார். 

இந்த விஷயத்தில் முக்கியமான குற்றம், இருசக்கர வாகனத்தை போதிய வயதை எட்டாத சிறுவன் ஓட்டியுள்ளான். இதற்கடுத்த குற்றம், பைக்கில் செல்லும் இருவரது தலையிலும் ஹெல்மெட் இல்லை. 

3வது குற்றம், அதிவேகத்தில் பயணித்திருப்பது. எந்த அளவிற்கு அதிவேகம் என்றால், வீடியோவை காட்சிப் படுத்தியவர்கள் காரில் சென்றுள்ளனர். 

ஆனால் இவர்களது காரை காட்டிலும் அதிவேகத்தில் அந்த சிறுவன் தனது எக்ஸ்.எல் பைக்கை ஓட்டியுள்ளான். 

வீடியோவில், சாலையில் இவர்கள் இருவரது வாகனங்களை தவிர்த்து வேறெந்த வாகனமும் இல்லை. வீடியோ முடியும் தருவாயின் போதே சில வாகனங்களை பார்க்க முடிகிறது. 

அத்துடன், சாலை நேராக எந்தவொரு வளைவும் இன்றி உள்ளதால், இந்த சிறுவனால் அவ்வளவு வேகத்தில் வயதானவரை பின்னால் வைத்து கொண்டு செல்ல முடிந்துள்ளது. 

இருப்பினும் இவ்வாறான செயல்கள் தண்டனைக்குரிய குற்றமாகும். சிறுவனது பாட்டி அவரது ஆபத்தான சூழலை உணராமல் பயணம் செய்துள்ளார். 

ஏனெனில் பொதுவாகவே 2-வீலரில் ஒரு பக்கம் பார்த்தவாறு அமர்ந்தால் ரைடருக்கு போதிய பேலன்ஸ் கிடைக்காது. நன்கு டிரைவிங் தெரிந்தவரால் மட்டுமே அத்தகைய சூழலை கையாள முடியும். 

ஒரு சிறுவனால் அது சாத்தியமற்றது. சாலையில் இவ்வளவு வேகத்தில் செல்லும்போது ஏதேனும் ஒன்று குறுக்கே வந்தாலோ அல்லது குழியில் பைக் இறங்க நேர்ந்தாலோ பைக்கின் கட்டுப்பாட்டை இழக்க நேரிடலாம். 

பேலியோ அவியல் செய்வது எப்படி?

அத்தகைய சூழலை நன்கு முதிர்ந்த பைக் ஓட்டியாலேயே சரிவர கையாள முடியாது எனும் போது, கால் கூட எட்டாத இந்த சிறுவனால் வாய்ப்பே இல்லை. 

டிவிஎஸ் எக்ஸ்.எல் அளவில் சிறியது. இருப்பினும் அத்தகைய பைக்கிலேயே இந்த சிறுவனுக்கு கால் எட்டவில்லை.

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings