லாரிகளுக்கு இடையில் சிக்கிய கார்... கை கொடுத்த சன்ரூப் !

0

இரண்டு மிகப் பெரிய டிரக்குகளுக்கு இடையில் கார் ஒன்று சிக்கி அப்பளம் போல் நொருங்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. 

லாரிகளுக்கு இடையில் சிக்கிய கார்... கை கொடுத்த சன்ரூப் !
இந்த மோசமான விபத்தினால் காரில் வந்தவர்களுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை என்கிற ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

வாங்க. இரண்டு மிகப் பெரிய லாரிகளுக்கு இடையில் சிக்கி கார் ஒன்று விபத்துக்கு ஆளாகி இருப்பது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. 

கார் இருக்கும் நிலையை வைத்து பார்த்தால் பயணிகளுக்கு மிக மோசமான நிலை ஏற்பட்டிருக்குமோ என அஞ்ச செய்யும் வகையில் உள்ளது.

மேலும், அவர்கள் காரை விட்டு எப்படி வெளியே வந்திருப்பார்கள் எனவும் நம்மை கேள்வி எழுப்பச் செய்கின்றது. ஆனால், இந்த காரில் வந்த பயணிகள் அனைவரும் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பி இருக்கின்றனர். 

மேலும், அவர்கள் தற்போது மிகுந்த நலமுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நடைபெற்ற பின்னர் காரின் கதவு உட்பட பல பாகங்கள் செயலற்றதாக மாறி இருக்கின்றது. 

இந்த நிலையில், காரில் இருந்த பயணிகள் சன் ரூஃபை திறந்து அதன் வாயிலாக காரை விட்டு வெளியே வந்து தப்பித்து இருக்கின்றனர். 

காரில் சன்ரூப் இல்லாமல் போயிருந்தால் அவர்களை மீட்பது பெருத்த சவாலானதாக விஷயமாக மாறி இருக்கும். 

விபத்து நடைபெற்றிருக்கும் படங்களை வைத்து பார்க்கையில் மிக மோசமான விபத்தையே ஹூண்டாய் வெர்னா சந்தித்து இருக்கின்றது என்பது தெளிவாக தெரிகின்றது. 

அடையாளம் காண முடியாத அளவிற்கு அந்த கார் லாரிகளுக்கு இடையில் சிக்கி அப்பளம் போல் நொருங்கி இருக்கின்றது. 

இத்தகைய சூழலிலும் பயணிகள் அனைவருக்கும் மிக நேர்த்தியான பாதுகாப்பை அந்த கார் வழங்கி இருக்கின்றது. 

இதுவே கொடூரமான விபத்தில் இருந்து தன்னுடைய பயணிகளை பத்திரமாக பாதுகாத்து இருக்கின்றது. இந்த கார் உச்சபட்ச வேகத்தில் வந்திருக்கின்றது. 

இன்சுலின் போடும் முன் கவனிக்க வேண்டியவை !

இந்த அவசர கதியிலேயே அதற்கு முன்னால் சென்றுக் கொண்டிருந்த டிரக்கை முந்திச் செல்ல அது முயற்சித் திருக்கின்றது. 

ஆனால், சாலை யோரத்தில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த மற்றொரு டிரக்கை வெர்னா டிரைவர் கவனிக்க வில்லை. இந்த நிலையிலேயே இரு டிரக்குகளுக்கும் இடையில் சிக்கி வெர்னா விபத்தைச் சந்தித்து இருக்கின்றது. 

இது மிக மோசமான விபத்தாகும். சரியாக கணிக்காமல் கவனக் குறைவுடன் காரை திருப்பியதே அது விபத்தைச் சந்தித்ததற்கான மிக முக்கியமான காரணம். 

அதே வேளையில் விபத்திற்கான மற்றொரு முக்கிய காரணமாக அதிக வேகம் இருக்கின்றது. சாலையில் அந்த கருப்பு நிற வெர்னா சீறிப் பாய்ந்துக் கொண்டு வந்ததாகக் கூறப்படுகின்றது. 

இவ்வாறு அதிக வேகத்தில் பயணிக்கக் கூடாது என வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை வழங்கியும் அவர்கள் அதை மீறி அதீத வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். 

இதன் விளைவு எதிர் பாராதமாக விபத்துகள் அரங்கேறி விடுகின்றன. ஆனால், அந்த அனைத்து விபத்துகளிலும் ஹூண்டாய் வெர்னா கார் விபத்து சம்பவத்தை போல உயிர்கள் பாதுகாக்கப் படுவதில்லை. 

சில நேரங்களில் அதிக பாதுகாப்பான கார்கள் கூட உயிர்களை பாதுகாக்க தவறி விடுகின்றன. இந்தியாவில் நாளுக்கு நாள் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. 

இதற்கு சான்றாகவே ஹூண்டாய் வெர்னா விபத்து சம்பவம் அமைந்துள்ளது. விபத்துகளைத் தவிர்க்கும் விதமாக அரசும், போக்குவரத்துத் துறையும் பல அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. 

இருந்த போதிலும் விபத்தின் எண்ணிக்கை குறைந்ததாக தெரியவில்லை. வாகன ஓட்டிகளாகிய நாம் நினைத்தால் மட்டுமே விபத்துகளைத் தவிர்க்க முடியும். 

அதிக வேகத்தில் செல்வதை தவிர்த்தல், போக்குவரத்து விதிகளைக் கட்டாயம் கடைப்பிடித்தல், பாதுகாப்பு (ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட்) 

கவசங்களை அணிவது உள்ளிட்டவற்றை செய்தால் மட்டுமே விபத்துகளையும், விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு களையும் தவிர்க்க முடியும். 

இதனை நாம் செய்ய தவறும் பட்சத்தில் அதிகம் விபத்து நடைபெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியா விரைவில் முதல் இடம் பிடிக்கும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings