கழுதையை இறக்குமதி செய்யும் சீனா... காரணம் தெரியுமா?

0

பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக கழுதைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கான காரணம் என்னவாக இருக்கும்? இங்கே தெரிந்து கொள்ளலாம்.

கழுதையை இறக்குமதி செய்யும் சீனா... காரணம் தெரியுமா?
பாகிஸ்தானில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் பாகிஸ்தானின் பல்வேறு துறைகள் பாதிக்கப் பட்டுள்ளன.

ஆனால் இந்த மோசமான சூழ்நிலைக்கு மத்தியிலும், கால்நடைத் துறை மற்றும் விவசாயத் துறை மிகப்பெரிய பங்களிப்பையும் லாபத்தையும் கொடுத்து வருகிறது.

பாகிஸ்தானில் கடந்த 2023 நிதியாண்டில் விவசாயத் துறையிலிருந்து 62.68 சதவீதமும், தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14.36 சதவீதமும், 

கால்நடைத் துறையின் பங்களிப்பு கடந்த ஆண்டு 2.25 சதவீதத்துடன் ஒப்பிடும் போது 3.78 சதவீதமாக வளர்ச்சி யடைந்துள்ளது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கால்நடைகளின் எண்ணிக்கையைப் பற்றி பேசுகையில், கடந்த நிதியாண்டில் 43.7 மில்லியனாக இருந்த எருமைகளின் எண்ணிக்கையும் 45 மில்லியனை எட்டியுள்ளதாக கணக்கெடுப்பில் குறிப்பிடப் பட்டுள்ளது.

2022-23 நிதியாண்டில் கழுதைகளின் எண்ணிக்கை 1,00,000 அதிகரித்து 5.8 மில்லியனை எட்டியுள்ளது, இது முந்தைய காலத்தின் போது 5.7 மில்லியனாக இருந்தது.

செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளின் எண்ணிக்கை முறையே 32.3 மற்றும் 84.7 மில்லியனாக அதிகரித்துள்ளது என்று புதிய தரவு காட்டுகிறது.

ஆனால் பாகிஸ்தானில் ஒட்டகங்கள், குதிரைகள் மற்றும் கோவேறு கழுதைகளின் எண்ணிக்கை கடந்த நான்கு ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் காணவில்லை.

சீனாவிற்கு கழுதைகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் ஆண்டு தோறும் மில்லியன் கணக்கான டாலர்களை அந்நியச் செலாவணியாக ஈட்ட பாகிஸ்தான் யோசிப்பதாக சில பாகிஸ்தானைச் சேர்ந்த செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

சீனாவின் பாரம்பரிய மருத்துவ முறைக்கு கழுதைகளின் தேவை அதிகம் உள்ளது. எனவே பாகிஸ்தானிலிருந்து சர்வதேச சட்டத்தை மீறி அதிகமாக கழுதைகளை இறக்குமதி செய்கிறது சீனா.

பாகிஸ்தானிலும் ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்பிலான அந்நியச் செலாவணியை ஈட்டுவதற்காக, கிராம மக்களை கழுதை வளர்க்க அரசு கட்டாயப் படுத்துவ தாகவும் கூறப்படுகிறது.

கழுதையை இறக்குமதி செய்யும் சீனா... காரணம் தெரியுமா?

சீனாவில் இறைச்சி, தோல் மற்றும் பால் உட்பட கழுதையின் உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் சீன சந்தையில் தேவை அதிகமாக உள்ளது. 

சீன தெரு உணவுகளில் இறைச்சி தேவைப்படுவதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. சில நேரங்களில் வாடிக்கை யாளர்களுக்கு தெரியாமல் கழுதை இறைச்சி பயன்படுத்தப் படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2019 ல் வெளியான அறிக்கையின்படி பாகிஸ்தானில் இருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கழுதைகள் மிக மோசமாக பயன் படுத்தப்பட்டு கொல்லப் படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி யுள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings