கப்பல் நிறுவனத்தில் வேலை செய்யும் மகன் தன் தந்தை மீன் பிடித்து தொழில் செய்வதற்காக ரூபாய் 13.5 லட்சம் மதிப்பிலான மாருதி எக்ஸ்எல் 6 காரை வாங்கி பரிசாக அளித்துள்ளார்.
இவர்கள் கண்மாயை வருட குத்தகைக்கு எடுத்து அதில் மீன்பிடித்து விற்கும் தொழிலைச் செய்து வருகின்றனர். இவர்களுக்கு சுரேஷ் கண்ணன் என்ற ஒரு மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர்.
நெய் ஆபத்தானதா? தெரிந்து கொள்ளுங்கள்
சுரேஷ் கண்ணன் இன்ஜினியரிங் படித்து ஒரு தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான மிகப்பெரிய கப்பல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்த சுரேஷ் கண்ணன் தற்போது மிகப்பெரிய நிறுவனத்தில் மாதம் ரூபாய் 2 லட்சம் சம்பளம் வாங்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார்.
சுரேஷ் கண்ணன் வேலைக்குச் சென்ற பின்பு தான் அவரது இரண்டு சகோதரிகளுக்கும் திருமணம் செய்து வைத்தார். அவரது சொந்த செலவிலேயே இந்த திருமணத்தை நடத்தினார்.
அதன் பின்னர் ஊரில் அவருக்குச் சொந்தமாக இருந்த இடத்தில் ஒரு வீடு ஒன்றைக் கட்டினார். அவரது குடும்பம் செட்டில் ஆகும் வரை அவர்கள் தந்தையும் மீன்பிடித் தொழிலையே செய்து வந்தார்.
ஆனால் சிவானந்தம் அதைக் கேட்கவில்லை தான் இருக்கும் வரை தானே உழைத்துச் சாப்பிட வேண்டும் என விரும்பினார். இதனால் தொடர்ந்து மீன் பிடி தொழிலைச் செய்து வந்தார்.
இவர் கண்மாயில் மீனைப் பிடித்து அப்பகுதியில் உள்ள மீன் கடைகளுக்குச் சென்ற அந்த மீனை விற்பனை செய்வது வழக்கம்.
இந்நிலையில் தனது தந்தைக்கு உதவும் வகையில் சுரேஷ் கண்ணன் தன் தந்தைக்கு ரூபாய் 13.5 லட்சம் மதிப்பிலான மாருதி சுஸூகி நிறுவனத்தின் எக்ஸ்எல் 6 என்ற காரை வாங்கி பரிசாக அளித்துள்ளார்.
உலகில் எவராலும் ஏற முடியாத ஒரு சிகரம் !
இந்தக் காரை அவர் தனது தந்தையின் பெயரிலேயே வாங்கிக் கொடுத்துள்ளார்.
தற்போது சுரேஷ் கண்ணனின் தந்தையும் தாயும் இந்த காரிலேயே தங்கள் பிடித்த மீன்களை கடைகளுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
எங்களுக்காக எங்கள் மகன் கார் வாங்கி கொடுத்தது பெருமையாக இருக்கிறது. நாங்கள் கஷ்டப்பட்டு எங்களது மகனைப் படிக்க வைத்தோம். தற்போது அவர் எங்களுக்காக கார் வாங்கிக் கொடுத்துள்ளார்.
இந்தக் காரில் தான் மீன்களை எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகிறோம். கார் என்பதை இதுவரை நாங்கள் நினைத்துக் கூட பார்த்தது கிடையாது.
இது எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது எனக் கூறினார். மாருதி சுஸூகி எக்ஸ்எல் 6 காரை பொறுத்தவரை மொத்தம் மூன்று வேரியன்ட்கள் இருக்கிறது.
இது அதிக பட்சமாக 101.65 பிஎச்பி பவரையும், 136.8 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த காரில் ஒரே நேரத்தில் 6 பேர் வரை பயணிக்கலாம்.
நார்ச்சத்து எடுத்துக் கொள்பவர் களுக்கான ஆலோசனைகள்
இந்த காரில் சிவானந்தம் தனது மீன்களை ஏற்றிச் செல்லும் வகையில் 209 லிட்டர் அளவிலான பூட் ஸ்பேஸ் வசதி இருக்கிறது. இந்தக் கார் லிட்டருக்கு 20.27 கிலோமீட்டர் மைலேஜை வாரி வழங்கும் திறன் கொண்டது.
இந்த காரில் ஸ்மார்ட் ஹைபிரிட் டெக்னாலஜி பொருத்தப் பட்டுள்ளது. இந்த கார் மார்க்கெட்டில் மஹிந்திரா எக்ஸ்யூவி 700 ஹூண்டாய் க்ரெட்டா ஆகிய கார்களுக்கு போட்டியாக விற்பனையாகி வருகிறது.
Thanks for Your Comments