பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனை தொகுத்து வழங்க நடிகர் கமல்ஹாசனுக்கு ரூ.100 கோடிக்கு மேல் சம்பளம் வழங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியில் இந்நிகழ்ச்சியை சல்மான் கானும், தெலுங்கில் நாகார்ஜுனாவும், கன்னடத்தில் கிச்சா சுதீப்பும், மலையாளத்தில் மோகன்லாலும் நடத்தி வருகின்றனர்.
அதே போல் தமிழில் இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். தமிழில் இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 சீசன்கள் முடிவடைந்துள்ளது.
இதில் முதல் மூன்று சீசனில் ஆரவ், ரித்விகா, முகென் ராவ் ஆகியோர் டைட்டில் வின்னர்கள் ஆகினர்.
கடைசியாக நடந்து முடிந்த மூன்று சீசன்களில் ஆரி, ராஜு மற்றும் அசீம் ஆகியோர் டைட்டில் வின்னர் பட்டத்தை தட்டிச் சென்றனர்.
இந்த நிலையில், தான் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 7-வது சீசனுக்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
தற்போது கொரோனா பாதிப்பு முழுவதுமாக குறைந்து விட்டதால், மீண்டும் இந்த ஆண்டு முதல் பழையபடியே ஜூலை மாதத்தில் இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளது.
இதனால் பிக்பாஸ் சீசன் 7 தொடங்க இன்னும் ஒரு மாதமே எஞ்சி உள்ளது.
இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 7-ல் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணி ஒரு பக்கம் படு ஜோராக நடைபெற்று வந்தாலும், மறுபக்கம் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ள கமல்ஹாசனின் சம்பளம் விவரம் தெரிய வந்துள்ளது.
நம் உடலில் உள்ள வியர்வை சுரப்பிகள் தெரியுமா? உங்களுக்கு... !
முதலில் ரூ.100 கோடி சம்பளம் தருவதாக பிக்பாஸ் குழு கேட்டதற்கு முடியவே முடியாது என டீல் பேசி ரூ.130 கோடி சம்பளத்திற்கு ஓகே சொல்லி இருக்கிறாராம்.
Thanks for Your Comments