ஆண்கள் மட்டும் கலந்து கொண்ட கறி விருந்து... விநோத கோயில் திருவிழா !

1

பத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் கலந்து கொண்டு கிடாக்கறி விருந்துண்ட விநோதமான திருவிழா உசிலம்பட்டி அருகே கரும்பாறை முத்தையா கோயிலில் நேற்று சிறப்பாக நடந்தது.

ஆண்கள் மட்டும் கலந்து கொண்ட கறி விருந்து... விநோத கோயில் திருவிழா !
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சொரிக்காம் பட்டியில் அறுவடைக் காலத்தில் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் கிடா வெட்டு சமபந்தித் திருவிழா ஆண்டு தோறும் நடைபெறும்.

இந்தக் கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் அறுவடைக் காலமான தை அல்லது மாசி மாதங்களில் கிடா வெட்டி அனைத்து சமூக மக்களுக்கும் விருந்து வைப்பதைப் பல ஆண்டுகளாகச் செய்து வருகின்றனர்.

இந்த சமபந்தித் திருவிழாவிற்காக கறுப்புக் கிடாக்களை கிராம மக்கள் காணிக்கையாக அளிப்பார்கள். அந்தக் கிடாக்கள் அப்பகுதியில் தானாக வளர்ந்து வரும். 

தோட்டங்களில் உள்ள பயிர்களை இந்தக் கிடாக்கள் உண்ண வரும்போது முத்தையா சாமியே வந்து உண்ணுவதாக நினைத்து விரட்டுவது கிடையாது என்கிறார்கள் இப்பகுதி மக்கள்.

இந்த ஆண்டு மழைப் பொழிவு குறைவானதால் தை, மாசி மாதத்தில் அறுவடை செய்ய முடியாமல் போனதால் கோடை விவசாயம் செய்து தற்போதுதான் அறுவடை முடிந்தது.

இந்நிலையில் அறுவடை முடிந்த கையோடு கருப்பாறை முத்தையா சாமிக்குத் திருவிழா எடுத்தனர். 100-க்கும் அதிகமான கிடாக்களை வெட்டி 2,500 கிலோ அரிசியில் சாப்பாடு தயார் செய்து சிறப்புப் பூஜை செய்தனர்.

அதைத்தொடர்ந்து சமபந்தித் திருவிழா சிறப்பாகத் தொடங்கியது. அதிகாலை முதலே இந்த சமபந்தியில் கலந்து கொள்ள செக்காணூரணி, சொரிக்காம்பட்டி, பெருமாள் கோயில்பட்டி, கரடிக்கல் 

உடலில் தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும் வால்நட் !

உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்க ளிலிருந்து அனைத்து சமுதாயங்களைச் சேர்ந்த பத்தாயிரத்திற்கும் அதிகமான ஆண்கள் மட்டும் கலந்து கொண்டு உணவருந்தினர்.

உணவருந்திய பின் இலையை எடுக்கக் கூடாது என்பதால் அப்படியே விட்டுச் சென்றனர். ஒரு வாரம் கழித்து, இலைகள் காய்ந்த பின்னர் தான் இந்தக் கோயில் அமைந்துள்ள பகுதிக்குப் பெண்கள் வருவார்கள்.
Tags:

Post a Comment

1Comments

Thanks for Your Comments

  1. கரி விருந்து போட்டு நல்லா காசு எடுக்கிறாங்க

    ReplyDelete
Post a Comment
Privacy and cookie settings