பிரபல தாதா முக்தார் அன்சாரியின் நெருங்கிய உதவியாளர் சஞ்சீவ் மகேஸ்வரி ஜீவா லக்னோ நீதிமன்ற வளாகத்தில் வைத்து சுட்டுக் கொல்லப் பட்டார்.
முக்தார் அன்சாரியின் நெருங்கிய உதவியாளராகக் கருதப்படும் ஜீவா, பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பிரம்மதத்தா திவேதி கொலை வழக்கில் குற்றம் சாட்டப் பட்டார்.
ஜீவா மீது பல்வேறு குற்ற வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.
நில அபகரிப்பு, மிரட்டல் மற்றும் கொலை உள்பட 60-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல தாதா முக்தர் அன்சாரி, கடந்த 2005-ம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
ஏறக்குறைய 2 தசாப்தங்களாக சிறையில் இருந்து வருகிறார்.
வாரணாசியில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.வுக்கான கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்தது. கடந்த மே 19-ந்தேதி விசாரணை முடிந்தது.
உடல் எனும் இயந்திரம் நாக்கு !
இந்த வழக்கில் முக்தார் அன்சாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
Thanks for Your Comments