பள்ளிகள் திறப்பு தள்ளிப் போனதால் இந்த முடிவு... கல்வித்துறை அமைச்சர் !

0

தமிழ்நாட்டில் கடந்த கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வு, ஆண்டு இறுதித் தேர்வு முடிந்து ஏப்ரல் இறுதியில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டன. 

பள்ளிகள் திறப்பு தள்ளிப் போனதால் இந்த முடிவு... கல்வித்துறை அமைச்சர் !
மீண்டும் பள்ளி ஜூன் 1ஆம் தேதி திறக்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டது. ஆனால் கோடை வெயில் கொடுமை குறையாத நிலையில்  மீண்டும் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது. 
தாயின் உடல் பருமன் பிறக்காத குழந்தையையும் குண்டாக்குமா?
அந்த வகையில் 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12ஆம் தேதியும் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 14ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இந்த கல்வி ஆண்டை தொடங்குவதற்கு தாமதமாகி யுள்ளதால் அதனால் பாடங்களை குறிப்பிட்ட நாள்களில் முடிக்க முடியாமல் போகலாம். 

அல்லது குறைவான நாள்களில் அதிக பாடங்களை முடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆசிரியர்களும் மாணவர்களும் தள்ளப் படுவார்கள்.

நாளை மறுநாள் (ஜூன் 12) பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் இது தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மாணவர்களின் உடல்நிலை பாதிக்கப் படக்கூடாது என்பதால் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது. 
பெண்கள் வெள்ளி நகை அணிவது எதற்காக....!

பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வியாண்டில் ஒரு பாடத்திற்கு நான்கு மணிநேரம் பற்றாக்குறை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பற்றாக் குறையை போக்குவதற்கு சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. 

மாணவர்களுக்கு பாடச்சுமை இல்லாதவாறு சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தப்படும். படிப்பு மட்டுமல்லாமல் சிலம்பம் போன்ற விளையாட்டுகளிலும் கவனம் செலுத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings