சொந்த விமான நிலையம் வைத்திருந்த இந்தியாவின் முதல் பில்லியனர் !

0

இந்தியாவின் பணக்காரர்கள் என்றதுமே நம் நினைவுக்கு வருவது முகேஷ் அம்பானி, கௌதம் அதானி, ஷிவ் நாடார், லக்ஷ்மி மிட்டல் உள்ளிட்டோர் தான். 

சொந்த விமான நிலையம் வைத்திருந்த இந்தியாவின் முதல் பில்லியனர் !
குறிப்பாக முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி மிகப் பெரிய உச்சத்தை எட்டியுள்ளனர். இந்திய சுதந்திரத்துக்கு பிறகு மிகப் பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளனர்.

ஆனால் இந்திய சுதந்திரத்தின் போது மிகப் பெரிய பணக்காரராக இருந்தவரான மிர் ஒஸ்மான் அலி கான் பற்றி நாம் பெரிய அளவில் அறிந்திருக்க வில்லை என்று தான் கூற வேண்டும்.

ரிக்டர் அளவுகோல் எப்படி உருவானது?

ஆனால் யாரிடமும் இல்லாத பல காஸ்ட்லியான விஷயங்கள் இந்த பணக்காரரிடம் உள்ளது. இவர் மும்பையிலோ, டெல்லியிலோ அல்லது வெளிநாட்டிலோ இல்லை. 

சென்னையில் இருந்து ஒரு 630 கிலோ மீட்டர் தொலைவில் ஹைதராபாத்தில் தான் வாழ்ந்துள்ளார். 1886ல் பிறந்த மிர் ஓஸ்மான் சுதந்திர இந்தியாவின் முதல் பில்லியனராக திகழ்ந்தார். 

அவர் தான் பிரிட்டிஷ் காலத்தில் ஹைதராபாத்தின் கடைசி நிஜாமாக இருந்தவர். இந்தியாவுடன் இணையாமல் பிரிட்டிஷ் அரசுக்கு ஒத்துழைத்து 1911 முதல் ஹைதராபாத்தை ஆண்டு வந்தார். 

சொந்த விமான நிலையம் வைத்திருந்த இந்தியாவின் முதல் பில்லியனர் !

1948ல் ஹைதராபாத் இந்தியாவுடன் இணைந்த பிறகு அவரது ஆட்சி நிறைவடைந்தது. இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தானுடன் இணைய வேண்டும். 
பனிக்கால பாதிப்பில் இருந்து குழந்தையை பாதுகாப்போம் !

அல்லது தனி ராஜ்ஜியமாக ஹைதராபாத்தை ஆள வேண்டும் என எண்ணினார். அந்த காலத்தில் இந்தியாவிலேயே பணக்கார நபராக அவர் தான் அறியப்பட்டார்.

(nextPage)

உலக அளவில் குறிப்பிடத்தக்க பணக்காரராக இருந்தார். 1940களில் அவரிடம் 2 பில்லியன் டாலர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. 2023ல் இதன் மதிப்பு 35.8 பில்லியன் டாலர்கள். 

நவீன ஹைதராபாத்தை வடிவமைத்தவர் என அறியப்படும் நிஜாம், இந்தியாவின் முதல் ஏர்லைன் மற்றும் ஏர்போர்டை உருவாக்கினார். 

சொந்த விமான நிலையம் வைத்திருந்த இந்தியாவின் முதல் பில்லியனர் !

அவரது காலத்தில் ஹைதராபாத்தில் சாலை வசதிகள் செய்யப்பட்டது. ரயில் வசதி வந்தது. ஹைதராபாத் உயர் நீதிமன்றம், ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத் ஆகியவற்றை உருவாக்கினார்.

1937ல் டைம்ஸ் மேகசினின் அட்டைப் படத்தில் இவர் இடம் பெற்றுள்ளார். இவர் குறித்த தரவுகள் சரியாக இருந்தால் 185 கேரட் வைரத்தை தான் அவர் பேப்பரில் பறக்காமல் இருக்க வைக்கப்படும் எடையாக பயன்படுத்துவாராம்.

குழந்தைகள் வாந்தி எடுப்பதற்கான காரணங்களும் சிகிச்சைகளும் !

ராணி எலிசபத் 2 திருமணத்துக்கு இவர் அளித்த வைர நெக்லஸை ராணி மரணிக்கும் வரை அணிந்திருந்தாராம். இந்தியா ஹைதராபாத்தை ஆட்சி செய்யத் தொடங்கிய பிறகு இவர் அரசு பிரமுகராக இருந்தார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings