விமான நிலையத்தில் கண்ணீருடன் நின்ற சிறுமி... முதல்வரால் பரபரப்பு !

0

தஞ்சை மற்றும் திருச்சியில் தற்போது தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றது. அந்த பணிகளை பார்வையிட முதலமைச்சர் முக ஸ்டாலின் சென்னை யிலிருந்து விமான மூலம் திருச்சி வந்தடைந்தார்.

விமான நிலையத்தில் கண்ணீருடன் நின்ற சிறுமி... முதல்வரால் பரபரப்பு !
அப்போது திருச்சி விமான நிலையத்தின் வெளியே தாயாருடன் நின்றிருந்த சிறுமி ஒருவர் தனது படிப்பிற்கு உதவுமாறு கண்ணீர் மல்க முதல்வர் மு.க.ஸ்டாலினை ஸ்டாலின் அங்கிள் ஸ்டாலின் அங்கிள் என அழைத்தார்.

ஆனால் அப்போது முதல்வர் அந்த சிறுமியை கவனிக்காமல் திமுக தொண்டர்களை பார்த்து கை அசைத்தவாறு சென்றார்.

மேலும் இது குறித்து சிறுமியின் தாய் கவிதா கூறுகையில் எனது சொந்த ஊர் கோயம்புத்தூர் அங்கு நானும் எனது கணவர் மகன் மற்றும் மகளுடன் வசித்து வருகின்றோம். 

இந்நிலையில் எனது கணவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக இறந்து விட்டார். இதனால் எங்கள் வாழ்வாதாரத்தை நடத்த முடியாமல் சூழல் இருந்து வருகின்றது.

மேலும் எனக்கு தண்டுவட ஆபரேஷன் நடை பெற்றுள்ளதால் என்னால் வேலைக்கு செல்ல முடியவில்லை, எனது மூத்த மகன் ஒன்பதாம் வகுப்பு முடித்து பத்தாம் வகுப்பு செல்கின்றார். 

எனது இளைய மகள் இரண்டாம் வகுப்பிலிருந்து மூன்றாம் வகுப்பிற்கு செல்கிறார். எனது பிள்ளைகளை பள்ளியில் சேர்த்து வைத்து படிக்கவும் வீட்டு வாடகைகட்டவும் என்னால் முடியவில்லை. 

அதனால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றேன். இந்நிலையில் துவரங்குறிச்சியில் உள்ள எனது கணவரின் சொத்துக்களை வாங்குவதற்காக கடந்த ஒரு வருடங்களாக போராடி வருகிறேன்.

இந்நிலையில் எனது வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி கலெக்டரிடம் மனு அளித்துள்ளேன். அதனைத் தொடர்ந்து திருச்சி விமான நிலையம் வந்த முதல்வர் முக ஸ்டாலினை சந்தித்து மனு அளிக்க வந்தேன். 

கோதுமை ஆப்பிள் அல்வா செய்வது எப்படி?

அப்போது எனது கண்ணீரை பார்த்து எனது மகள் காவியா கதறி அழுது முதல்வர் ஸ்டாலினை ஸ்டாலின் அங்கிள் ஸ்டாலின் அங்கிள் என கூப்பிட்டார். 

ஆனால் அதிகாரிகளோ தமிழக முதல்வரோ எங்களை பார்க்காமல் அங்கிருந்து தொண்டர்களை பார்த்து விட்டு சென்றார். இறுதியாக வேறு வழி இல்லாமல் தற்கொலை செய்து கொள்வோம் என கண்ணீர் மல்க கூறினார். 

அதனை தொடர்ந்து தமிழக முதல்வர் சிறுமியின் கோரிக்கையை பரிசீலிக்க உத்தர விட்டதின் பேரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 

சிறுமியின் தாயாரிடம் மனுவை பெற்று மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் விசாரணை செய்து உடனடி நடவடிக்கை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings