பிளாஸ்டிக் சேர்களுக்கு நடுவில் ஓட்டை? தெரியாத விஷயம் !

0

பொதுவாக நமது வீடுகளில் பிளாஸ்டிக் ஸ்டூல்களை பயன்படுத்துவது வழக்கம். பிறந்தநாள் அன்று கேக் வெட்டும் போது கூட சில வீடுகளில் இதை பயன்படுத்தி, இதன் மேல் துணி போட்டு கேக் வைத்து வெட்டுவார்கள்.

பிளாஸ்டிக் சேர்களுக்கு நடுவில் ஓட்டை? தெரியாத விஷயம் !
தினமும் பார்க்கக் கூடிய இந்த ஸ்டூலின் மையத்தில் உள்ள ஓட்டையை பெரும்பாலும் நாம் அப்படியே கடந்து சென்றிருப்போம். 

சிலர் இந்த நடுவில் உள்ள ஓட்டையை கவனித்திருக்கவும் வாய்ப்பு உண்டு. ஆனால், இந்த ஓட்டைகள் எதற்கு உள்ளது என்று யோசித்துள்ளீர்களா? ஆம், இந்த ஓட்டைக்கு பின் ஒரு அசாதாரணமான அறிவியல் காரணம் உள்ளது.

டாய்லெட் பேப்பர் வெள்ளை நிறத்தில் இருப்பதற்கு காரணம் இதுதானாம் !

நாம் பார்க்கும் ஒவ்வொரு வீட்டு உபயோகப் பொருட்களுக்கு பின்னும் ஒரு அறிவியல் பூர்வ அர்த்தம் உண்டு. 

பொதுவாக சில பொருட்கள் குறிப்பிட்ட வழிகளில் வடிவமைக்கப் படுவது ஏன் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? 

இந்த பொருட்கள் அழகுக்காக தயாரிக்கப் பட்டவையா அல்லது இதன் பயன்பாட்டிற்காக தயாரிக்கப் பட்டவையா? என்கிற கேள்வி நமக்கு இருக்கும். 

உண்மையில் பெரும்பாலான பொருட்கள், ஒரு முக்கிய காரணத்திற்காகவே அவ்வாறு வடிவமைக்கப் படுகின்றன. மேலும், அந்த வடிவமைப்பு அம்சத்திற்கு என்று ஒரு நோக்கமும் உண்டு.

அப்படியொரு நோக்கம் தான் பிளாஸ்டிக் ஸ்டூல்களின் வடிவமைப்பிலும் உள்ளது. பிளாஸ்டிக் ஸ்டூல்களின் நடுவில் உள்ள ஓட்டையானது அதன் நிலைத் தன்மைக்காக வடிவமைக்கப்பட்டு உள்ளது. 

(nextPage)

இதன் வடிவமைப்பு பின்னணியில் உள்ள காரணம் :

பிளாஸ்டிக் சேர்களுக்கு நடுவில் ஓட்டை? தெரியாத விஷயம் !
அதாவது, இதன் வடிவமைப்புத் தேர்வின் பின்னணியில் உள்ள காரணம் என்ன வென்றால், அது நிலைத் தன்மையை உறுதி செய்து பாதுகாப்பான அமைப்பை தருமாம். 

மேலும், இந்த ஸ்டூலில் அமர யாரேனும் ஒருவர் அமர்ந்தால் அது உடைந்து போகாமல் தடுக்கவும் இந்த மையத்தின் ஓட்டை தான் உதவுகிறது.

இந்த ஓட்டைகள் சதுர வடிவிலோ அல்லது வேறு சில வடிவிலோ கொடுக்கப்பட்டு இருந்தால், இதில் நாம் உட்காரும் போது அழுத்தம் ஏற்பட்டு, அந்தக் குறிப்பிட்ட கோணங்களில் குவிந்து நார்களில் விரிசல் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். 

எனவே, இந்த வகையான ஸ்டூல்களில் வட்ட வடிவ ஓட்டை வடிவமைக்கப் படுகிறது. இதனால், நாம் அமரும் போது ஏற்படும் அழுத்தம் சமமாக பகிரப்பட்டு, ஸ்டூலின் வலிமையை உறுதி செய்கிறது.

பெண்களின் உயிரை வாங்கிய அந்த கால கருத்தடை சிகிச்சை !
அது மட்டுமல்லாமல், இந்த வகையாக பிளாஸ்டிக் ஸ்டூல்களை நமது வீடுகள் அல்லது கடைகளில் இடப்பற்றாக்குறை காரணமாக ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்போம். 

இந்த ஓட்டைகள் மையத்தில் இல்லை யென்றால் அடுத்த முறை அவற்றைப் பிரிப்பது எடுப்பது மிக கடினமானதாக இருக்கும். இதைத் தடுக்கவும் தான் இந்த ஓட்டையை வடிவமைத்துள்ளனர். 

மேலும், ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்படும் ஸ்டூல்களின் இடையில் வெற்றிடத்தை உருவாக்குவதைத் தடுக்கிறது. எனவே, காற்றழுத்தத்தைக் குறைப்பதன் மூலம், மிக எளிதாக அடுக்கி வைத்த ஸ்டூலை எடுக்க முடிகிறது.

இந்த பிளாஸ்டிக் ஸ்டூல்களை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும் போது வசதியாகவும், எளிதாகவும் இருக்கவும் இந்த மையப்பகுதி ஓட்டை கூடுதல் ஆதரவை தருகிறது. 

பிளாஸ்டிக் சேர்களுக்கு நடுவில் ஓட்டை? தெரியாத விஷயம் !

மேலும் இந்த ஓட்டை மிக பெரிதாக இருந்தாலும் சிக்கல் ஏற்பட்டு விடும். அதே போன்று, மிக சிறியதாக இருந்தால் இதன் நடுவில் விரல்களை விட்டு தூக்கி செல்வதும் மிக கடினம். 

எனவே, இதன் ஓட்டையானது சீரான அளவில் இருக்க வேண்டியது அவசியம். 

இந்த பிளாஸ்டிக் ஸ்டூல்களை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும் போது வசதியாகவும், எளிதாகவும் இருக்கவும் இந்த மையப்பகுதி ஓட்டை கூடுதல் ஆதரவை தருகிறது. 

காச நோய் மலட்டுத் தன்மையை உண்டாக்குமா? எப்படி தடுப்பது? 

மேலும் இந்த ஓட்டை மிக பெரிதாக இருந்தாலும் சிக்கல் ஏற்பட்டு விடும். அதே போன்று, மிக சிறியதாக இருந்தால் இதன் நடுவில் விரல்களை விட்டு தூக்கி செல்வதும் மிக கடினம். 

எனவே, இதன் ஓட்டையானது சீரான அளவில் இருக்க வேண்டியது அவசியம்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings