நாட்டிலேயே மிகப்பெரிய சமையலறை உள்ள ஆதரவற்ற இல்லம் !

0

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் அமைந்துள்ளது அப்னா கர் ஆசிரமம். இந்த ஆசிரமம் டாக்டர் பி.எம் பரத்வாஜ் மற்றும் டாக்டர் மாதுரி பரத்வாஜ் ஆகியோரால் நடத்தப்படும் ஆதரவற்ற மக்களின் இல்லமாகும்.

நாட்டிலேயே மிகப்பெரிய சமையலறை உள்ள ஆதரவற்ற இல்லம் !

தொடக்கத்தில் நூறு பேர் என்ற அளவிலேயே பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த ஆசிரமத்தில் 4600க்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்கள் தங்கி யிருக்கிறார்கள். 

அக்கா, தங்கையுள்ள ஆண்களை பெண்கள் விரும்ப காரணம் !

முதலில் நூறு பேருக்கு எந்த அளவுக்கு உணவு வழங்கப் பட்டதோ, அதை விட தரமான உணவு தற்போது 4600 பேருக்கும் வழங்கப் படுகிறது.

ஆசிரமத்தில் உள்ளவர்களுக்கு தேவையான உணவு சமைப்பதற் காகவே இந்த ஆசிரமத்தில் தனி சமையறை உள்ளது. அதாவது நாட்டிலேயே மிகப்பெரிய சமையலறை கட்டப்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

அதுவும் குறுகிய காலத்தில் ஆயிரக் கணக்கான நபர்களுக்கு உணவு சமைக்கும் வகையில், அதிநவீன உபகரணங்களுடன் கூடிய நாட்டின் மிகப்பெரிய சமையலறையாக கட்டப் பட்டுள்ளது.

இந்த சமையலறையில் சப்பாத்தி மேக்கர், காய்கறி கட்டர், பீலர் உள்ளிட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான உபகரணங்கள் உள்ளன. 

இந்த சமையலறையில் 4600 ஆதரவற்றவர் களுக்கான, வெறும் 8 மணி நேரத்தில் நான்கு வேளை உணவும் தயாரிக்கப் படுகிறது. இந்த சமையலறை 31 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. 

சூட்டை குறைக்கும் மல்லிகை பூவின் எண்ணெய் !

ஆசிரமத்தில் ஏராளமானோர் வசிப்பதால் அவர்களுக்கு உணவு சமைக்க அதிக நேரம் எடுக்கும். 

இதைக் கருத்தில் கொண்டு 31 ஆயிரம் சதுர அடியில் இந்த சமையலறை கட்டப்பட்டு ரூ.200 கோடி மதிப்பிலான உபகரணங்கள் வாங்கப் பட்டுள்ளதாக ஆசிரம நிர்வாகிகள் கூறுகின்றனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings