கண்கள் உள்ளே போய் குழி விழுதலை தடுப்பது எப்படி?

0
உடலில் புரதச்சத்து குறைவாக இருக்கும் போது இது போல முகம் வற்றிக் காணப்படும். தினமும் புரதச்சத்து நிறைந்த உணவுகளை பால் முட்டை பயறு வகைகள் மாமிச வகைகளை ஒருவர் நூறு கிராம் அளவாவது சாப்பிட வேண்டும். 
கண்கள் உள்ளே போய் குழி விழுதலை தடுப்பது எப்படி?
நிறை கொழுப்புச் சத்துள்ள உணவு நெய் வெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் தினமும் இரண்டு ஸ்பூன் அளவு உணவில் சேர்க்கவும். 
மதுப்பழக்கம் மற்றும் புகைப்பழக்கம் இருந்தால் நிறுத்த வேண்டும் ‌‌.இவை தோலில் உள்ள மினுமினுப்பை அகற்றி விடும். வெளியே செல்லும் போது SPF 50 உள்ள சன்ஸ்கிரீன் cream பயன்படுத்தவும். 

அதீத வெயில் உள்ள UVA UVB போன்ற புற‌ஊதா கதிர்கள் தோல் சுருக்கம் மற்றும் வயதான தோற்றத்தை தருவது உண்டு. அதிக வெயிலில் கண்கள் சுற்றி உள்ள தோல்கள் சுருங்கி கருவளையம் வரும். 

கண்கள் உள்ளே சென்றது போல் இருக்கும். இரவில் தூங்கும் போது கண்களை சுற்றி ஒரு துளி சுத்தமான விளக்கெண்ணெயில் மசாஜ் செய்யலாம். நீர்ச்சத்து குறைபாடு இல்லாமல் இருக்க வேண்டும். 
தினமும் நிறைய மோர் இளநீர் பருக வேண்டும். மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக வைக்க வேண்டும். 

தினமும் மாலை நேரம் வைட்டமின் ஏ சத்து நிறைந்த பப்பாளி பழம் மற்றும் சூடான பால் அருந்துவது மலச்சிக்கல் தீர உதவும். உணவில் காரம் மற்றும் தேனீர் குறைத்து விட வேண்டும். 
நெஞ்சில் எரிச்சல் அல்சர் தொந்தரவு இருந்தால் முகம் வற்றி விடும்.. அதிக புளிப்பு காரம் காபி டீ தவிர்க்கவும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings