ட்விட்டரில் ட்விட் போட்டால் இனி பணம் சம்பாதிக்கலாம் என எலான் மஸ்க் அதிரடியாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ட்விட்டர் என்ற சமூக வலைதளம் தற்போது கருத்துக்களை பரிமாறிக் கொள்ளும் தளமாகவும் பொழுது போக்கு அம்சமாகவும் உள்ளது.
இந்த நிலையில் ட்விட்டர் வலைதளத்தில் பதிவு செய்யப்படும் ட்விட்டரில் விளம்பரங்கள் பதிவு செய்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ட்விட்டர் பயனாளிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதே நேரத்தில் இந்த வசதி ப்ளூடிக் பயனார்களுக்கு மட்டுமே உண்டு என்றும் அவர்களுடைய ட்விட்டுக்களில் மட்டுமே விளம்பரம் இடம் பெறும் என்றும் இதற்காக ஐந்து மில்லியன் டாலர் ஒதுக்கப் பட்டுள்ளதாகவும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல சமூக வலைதளங்கள் பணம் சம்பாதிக்கும் தளமாக மாறி இருக்கும் நிலையில் தற்போது ட்விட்டரிலும் பணம் சம்பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Thanks for Your Comments