ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே ஜூன் 2-ந்தேதி இரவு 7 மணியளவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது.
விபத்துக் குள்ளான வேகத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் தடம் புரண்டு அருகில் உள்ள தண்டவாளத்தில் விழுந்தன.
குழந்தைகளுக்கு விருப்பமான முட்டை புலாவ் செய்வது எப்படி?
அப்போது அந்த தண்டவாளத்தில் அதிவேகமாக வந்த பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் கோரமண்டல் ரெயில் பெட்டிகள் மீது மோதி விபத்துக் குள்ளானது.
இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். மேலும், ஆயிரத்து 100 பேர் படுகாய மடைந்தனர். 3 ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்தார்.
இந்த நிலையில் தனது கணவர் ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்ததாக கூறி நிவாரணத் தொகையை பெறுவதற்காக நாடகமாடிய பெண் சிக்கலில் மாட்டியுள்ளார்.
கட்டாக் மாவட்டத்தில் உள்ள மணிபண்டாவைச் சேர்ந்தவர் கீதாஞ்சலி தத்தா. அவரது கணவர் பிஜய் தத்தா. இருவரும் கடந்த 13 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
கீதாஞ்சலி தனது கணவர் பிஜய் தத்தா ரெயில் விபத்தில் இறந்து விட்டதாகவும், ஒரு உடலை தனது கணவருடையது என்றும் கூறியுள்ளார்.
ஆனால், ஆவணங்களைச் சரி பார்த்ததில், அவர் பொய் சொன்னது தெரிய வந்தது. இதையடுத்து அவரை எச்சரித்து போலீசார் விடுவித்தனர்.
சுவையான அரைக்கீரை கொத்துக்கறி மசாலா செய்வது எப்படி?
கைது செய்யப் படலாம் என்ற அச்சத்தில் கீதாஞ்சலி தற்போது தலைமறைவாகி உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Thanks for Your Comments