ஜடேஜா மனைவி செய்த காரியம்.. ஏன் தெரியுமா?

0

சிஎஸ்கே குஜராத் போட்டிக்கு பின் நேற்று முதல் நாள் ஜடேஜா மனைவி செய்த காரியம் ஒன்று இணையம் முழுக்க கவனம் பெற்றுள்ளது. பெரும் உணர்ச்சி பெருக்கோடு நடந்து முடிந்து இருக்கிறது 2023 ஐபிஎல் தொடர். 

ஜடேஜா மனைவி செய்த காரியம்.. ஏன் தெரியுமா?
இந்த சீசன் தோல்வியோடு தொடங்கிய சிஎஸ்கே அணி யாரிடம் தோல்வி அடைந்ததோ அதே குஜராத் அணியை இரண்டு முறை அடுத்தடுத்து வீழ்த்தி பைனலில் வென்று கோப்பையை பெற்றுள்ளது.
ஸ்லீப்பர் க்ளட்சும், அது இயங்கும் விதமும் !

முக்கியமாக 5 வது முறையாக கோப்பையை சிஎஸ்கே வென்றுள்ளது. இதுவரை மும்பை மட்டுமே 5 கோப்பைகள் வென்ற அணி என்ற சாதனையை கொண்டு இருந்தது. அதை தற்போது சிஎஸ்கே சமன் செய்துள்ளது.

பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் 5வது முறையாக சிஎஸ்கே அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி உள்ளது. நேற்று முதல் நாள் சிஎஸ்கே டாஸ் வெல்ல குஜராத் முதலில் பேட்டிங் செய்தது. 

39 பந்துகள் பிடித்த சாகா 54 ரன்கள் எடுத்தார். இன்னொரு பக்கம் கில் 20 பந்தில் 39 ரன்கள் எடுத்தார், ஆனால் அதிரடி குறையாமல் ஆடிய தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் 96 ரன்களை 47 பந்துகளில் எடுத்தார். 

8 சிக்ஸ், 6 பவுண்டரி என்று சிஎஸ்கே அணியை இவர் புரட்டி எடுத்தார். கடைசியில் ஹர்திக் பாண்டியாவும் 12 பந்தில் 21 ரன்கள் எடுக்க குஜராத் அணி 20 ஓவரில் 214-4 ரன்கள் எடுத்தது. 

இதையடுத்து மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. அடுத்து 15 ஓவரில் 170 ரன்கள் எடுக்க வேண்டும் என்று டிஎல்எஸ் முறையில் அறிவிக்கப் பட்டது. 

இதையடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணி கடைசி ஓவரில் 13 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது. 

சிஎஸ்கே அணியில் கான்வே 47, ரஹானே 27 எடுக்க கடைசியில் டேஜா - துபே இருவரின் ஆட்டமும் நேற்று சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. 

பெட்ரோல் டேங்கில் தண்ணீர் புகுந்தால் என்ன தீர்வு !

இருப்பினும், ஜடேஜா ( 6 பந்தில் 15 ) மற்றும் சிவம் துபே ( 21 பந்தில் 32* ) எடுத்தனர்.இருவரின் ஆட்டம் சிஎஸ்கேவின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

முக்கியமாக சிஎஸ்கே ஹீரோ ஜடேஜாவின் அதிரடி ஆட்டம்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. 

இந்த நிலையில் தான் சிஎஸ்கே - குஜராத் போட்டிக்கு பின் நேற்று முதல் நாள் ஜடேஜா மனைவி செய்த காரியம் ஒன்று இணையம் முழுக்க கவனம் பெற்றுள்ளது.

இந்த போட்டி முடிந்ததும் ஜடேஜா மனைவிக்கு அவருடன் இருந்த சக பெண்கள் கை கொடுத்தனர். அதன்பின் ஜடேஜா மனைவி மைதானத்திற்கு சென்று ஜடேஜா காலில் விழுந்து வணங்கினார். 

அவர் தலையை சுற்றி தனது புடவையை வைத்து வட இந்தியர்கள் சிலர் முடியை மறைப்பது போல மறைத்து இருந்தார்.

கடந்த முறை மாடர்ன் உடையில் வந்து இருந்த ஜடேஜா மனைவி ரிவபா ஜடேஜா இந்த முறை அப்படி வரவில்லை. 

ஜடேஜா மனைவி செய்த காரியம்.. ஏன் தெரியுமா?
குஜராத் சட்டசபை தேர்தலில் ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜடேஜா ஜாம்நகர் வடக்கு தொகுதியில் வென்ற நிலையில் அவர் தனது உடையை இப்படி மாற்றிக் கொண்டார்.

இதை பாஜகவினர் பலரும் கொண்டாடி வருகின்றனர். அவர் பாரம்பரியபடி உடை அணிந்து பொது இடத்தில் தலையை மூடி உள்ளார். கணவன் காலில் விழுந்துள்ளார் என்று பாராட்டி வருகின்றனர்.

அதே சமயம் நெட்டிசன்கள் சிலர்.. மாணவிகள் ஹிஜாப் அணிவதை பிற்போக்குத் தனம் என்று பாஜக எதிர்க்கிறது. 

ஆனால் அதையே இந்து பெண் ஒருவர் தலையை மூடிக்கொண்டால் பாராட்டுகிறது.. இதற்கு பெயர் மட்டும் என்ன என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings