சுலைமான் இப்ராஹீம் எனும் குவைதிய வைத்தியர் கீழுள்ள படத்தை பதிவேற்றம் செய்தபின் இவ்வாறு குறிப்பொன்றையும் எழுதியுள்ளார்.
இறைவனுக்குப் பின்னர் - எனக்கு என் தாய்தான் எல்லாமே. என் தாயில்லாத உலகத்தை விட்டும் அல்லாஹ் என்னைக் காப்பாற்ற வேண்டும்.
எவ்வளவு ஆழமான, பாசமிகு வார்த்தைகள்!
உண்மையில் பெற்றோர்கள் பேரருள் தான்.
சில நேரம் இந்த அருளின் பெறுமதியை நாம் உணரும் போது நம் பெற்றோர்கள் உயிருடன் இல்லாமல் போகலாம்.
உயிருடன் இருக்கும் போது அவர்களுக்குரிய கடமைகளைச் செய்து விடுவோம்.
அவர்கள் நம்மைப் பெற்றவர்கள்.
நமக்காகவே வாழ்பவர்கள்.
நமக்காக அவர்களது வாழ்வையும் தியாகம் செய்பவர்கள்.
நம் அன்புக்கு முதலில் தகுதியானவர்கள் அவர்களே.
இறைவனின் கருணை நமக்கு கிடைக்கவும் காரணமானவர்கள் அவர்கள்.
நாம் எத்தனை வயதை அடைந்தாலும் அவர்கள் நமக்குப் பெற்றோர்கள் தான்.
எந்த சந்தர்ப்பத்திலும் அவர்களை வெறுத்து அவர்களுடனான உறவை துண்டித்து வாழவே முடியாது.
ஆனால் அற்ப காரணங்களுக்காக அவர்களுடன். கோபிக்கின்றோம், அவர்களை ஏசுகின்றோம், திட்டுகின்றோம்.
ஏன் பல வருடங்களாக அவர்களுடன் உறவாடாமல் கூட இருக்கின்றோம்.
எவ்வளவு பெரிய கொடுமை!
எவ்வளவு பெரிய பாவம்.
மறந்து விடக்கூடாது.
நம் மறுமை வெற்றியை தீர்மானிக்கும் விடயத்தில் மிக முக்கியமானவர்கள் அவர்கள்.
உடலில் உடையே இல்லாமல் தலையணை வைக்கும் பில்லோ சேலஞ்ச் !
மூக்கு மண்ணைக் கவ்வட்டும், மூக்கு மண்ணைக் கவ்வட்டும், மூக்கு மண்ணைக் கவ்வட்டும் என்று நபியவர்கள் கூறினார்கள். யார் (மூக்கு), அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்கப்பட்டது.
தம் பெற்றோரில் ஒருவரையோ அல்லது அவர்கள் இருவரையுமோ முதுமைப் பருவத்தில் அடைந்தும் (அவர்களுக்கு உடலாலும் பொருளாலும் ஊழியம் செய்து, அதன் மூலம்) சொர்க்கம் செல்லத் தவறியவரின் (மூக்குத் தான்) என்று பதிலளித்தார்கள்.
உயிருடன் உள்ள பெற்றோருடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள். மரணித்தவர் களுக்காக பிரார்த்தியுங்கள். அவர்களுக்காக தர்மம் செய்யுங்கள்.
Thanks for Your Comments