இந்தியாவின் டாப் 50 பணக்காரர்களில் ஒருவர், ரீடெயில் கிங், ரிலையன்ஸ் ரீடெயில், டி மார்ட், ஃப்யூச்சர் ரீடெயில் மார்ட், பிக்பசாருக்கு எல்லாம் முன்னோடி எனலாம்.
இந்தியாவில் அமீரகம் ஸ்மார்ட் சிட்டி கட்டமைக்கும் திட்டத்தைக் கொண்டு வருவது என இந்தியாவுக்கும், அரபு உலகத்துக்கும் ஒரு பாலமாகத் திகழும் இவருக்கு அமீரக அரச குடும்பம் வரை நல்ல செல்வாக்கு உண்டு.
அவர் பெயர் எம் ஏ யூசுப் அலி. அவரைக் குறித்துப் பார்க்க வேண்டுமானால், இந்தியாவின் அரபிக் கடலோரம் அழகாய் அமைந்திருக்கும் கேரளத்திலிருந்து தொடங்க வேண்டும்.
கையூட்டு கேட்டதால் பாலியல் வன்கொடுமை !
1955 ஆம் ஆண்டு திருச்சூர் மாவட்டத்தில் நதிக்கா (Nattika) கிராமத்தில் பிறந்தவர் யூசுப் அலி. சாதாரண நடுத்தர குடும்ப வாழ்க்கை தான், ஆனால் வியாபார குடும்பம்.
அதே கிராமப் புறத்திலேயே பள்ளிப் படிப்பும், பிசினஸ் மேனேஜ்மெண்டில் டிப்ளோமாவும் படித்து முடித்த கையோடு 18 வயதில் 1973-ல் அபுதாபிக்கு டிக்கெட் போட்டார்.
அதன் பிறகு கல்லூரிக்குச் சென்று பாடம் படிக்கவில்லை. எல்லாமே பிராக்டிக்கல் தான். மாமா எம் கே அப்துல்லாவின் மளிகைக் கடை வியாபாரத்தில் இணைந்து கொண்டார் யூசுப் அலி.
அப்படியே உணவு மற்றும் உணவு அல்லாத துறைகளிலும் வியாபாரத்தை வளர்த்தார் யூசுப் அலி.
1980களில் மேலை நாடுகளில் பால் இறைச்சி போன்ற எளிதில் கெட்டுப் போகும் பொருட்களுக்கு குளிர்சாதன வசதி பயன்படுத்தும் கலாச்சாரம் வேகமாகப் பரவிக் கொண்டிருந்தது.
அதை தன் சில்லறை மற்றும் மொத்தவில்லை வியாபாரத்தில் பயன்படுத்தினார் யூசுப் அலி. அதே 1980-களுக்குள்ளேயே, லூலூ நிறுவனம், ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு பெரும் வணிக நிறுவனமாக தன் தடத்தைப் பதித்திருந்தது.
குட்டி போட்ட பனிப்பாறை - 50 ஆண்டுகளில் அதிசயம் !
ஒரு கட்டத்தில், மாமாவிடமிருந்து பிரிந்து வந்து, தனக்கென தனியாக ஒரு சாம்ராஜ்ஜியத்தை நிறுவத் தீர்மானித்தார் யூசுப் அலி. ராய் பகதூர் மோகன் சிங் : 25 ரூபாயில் வாழ்வைத் தொடங்கி சாம்ராஜ்ஜியத்தைக் கட்டிய மனிதர்
1990-கள் வரை ஐக்கிய அரபு அமீரகம் போன்ற மத்தியக் கிழக்கு நாடுகளில் மளிகைக் கடைகளின் முகம், ரீடெயில் ஸ்டோர் வியாபாரமாக வளர்ச்சி காணத் தொடங்கி யிருந்தது.
Continent (தற்போது Carrefour) என்கிற நிறுவனம் துபாயில் ரீடெயில் வியாபாரத்தின் முகத்தையே மாற்றி எழுதிக் கொண்டு இருந்தது.
சில்லறை வணிகத்தில் ஏற்படும் மாற்றத்தைக் கனகச்சிதமாகப் புரிந்து கொண்டு, அதற்கு ஏற்றார் போல தன் லூலூ கடைகளையும் வாடிக்கை யாளர்களுக்குத் தகுந்தவாறு மாற்றி அமைத்தார்.
ஆரோக்கியமான பாஸ்ட் ஃபுட் தெரியுமா?
ஆனால் அதே 1990களில் யூசுப் அலி, அமீரகத்திலிருந்த வாய்ப்புகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, கடை விரித்தார். முதலில் லூலூ சூப்பர் மார்கெட்டாகத் தான் தொடங்கப்பட்டது.
2000வாக்கில் தான் ஹைப்பர் மார்கெட்டாக லூலூ பரிணமித்தது.
Thanks for Your Comments