நடிகர் கௌதம் கார்த்திக்கை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நடிகை மஞ்சிமா மோகன் தனது உடல்எடை குறித்து விமர்சனங்களைச் சந்தித்து வந்த நிலையில்
3 வயதாக இருந்தபோதே மலையாள சினிமாவான கலியூஞ்சல் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன்.
அதைத் தொடர்ந்து சூப்பர் கிட்ஸ் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் குட்டி தொகுப்பாளினியாக இருந்து வந்த அவர் பல்வேறு தெலுங்கு, மலையாள சினிமாக்களில் நடித்து வந்தார்.
இதையடுத்து 2015 இல் ஒரு வடக்கன் செல்பி திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றார்.
விரல் நுனியில் தோல் உரிவதை தடுக்க !
முதல் திரைப் படத்திலேயே க்யூட்டான நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமான இவர் தொடர்ந்து சத்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம், துக்ளக் தர்பார், களத்தில் சந்திப்போம், எஃப்ஐஆர் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்.
இந்நிலையில் தேவராட்டம் திரைப்படத்தில் நடித்த போது நடிகர் கௌதம் கார்த்தியுடன் பழகி வந்ததாகக் கூறப்பட்டது. இந்தக் காதல் ஜோடிகள் கடந்த நவம்பரில் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்தின் போது நடிகை மஞ்சிமா மோகன் பார்ப்பதற்கு சற்று எடை கூடுதலாக இருந்தார்.
பெண்களே இது போன்று உங்களுக்கும் நடக்கலாம் !
இந்நிலையில் தற்போது நடிகை மஞ்சிமா மோகன் தனது உடல் எடையை முற்றிலும் குறைத்து இருப்பது போன்ற ஒருசில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
வாவ்... அழகு பேரழகு
ReplyDelete