அனைவரையும் ஆச்சரியப்படுத்திய முதியவர்.. குவியும் பாராட்டுகள் !

0

சேலம் நான்கு ரோடு பகுதியில் பிரபல ஜவுளிக் கடைகள் மற்றும் நகை கடைகள் இருகின்றது. இந்த பகுதியில் பெரும்பாலும் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நிற்பது வழக்கம். 

அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய முதியவர்... குவியும் பாராட்டுகள் !
இந்நிலையில் முதலமைச்சர் வருகைக்காக அந்த பகுதியில் சாலைகள் சீரமைப்பு வர்ணம் பூசுதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

மேலும் தமிழக முதலமைச்சர் சேலத்தில் மூன்று நாட்கள் முகாமிட உள்ளதால் சேலம், தருமபுரி, நாமக்கல் உள்ளிட்ட மூன்று மாவட்ட காவல் துறையினர் முதலமைச்சரின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். 

இதனால் போக்குவரத்தை சீர் செய்ய போதிய காவலர்கள் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

மேலும் புதிய பேருந்து நிலையத்திற்கு வாகனங்கள் மற்றும் பேருந்துகள் கார்கள் என ஆயிரக் கணக்கான வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

அப்பொழுது இந்த போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி ஆகிய வாகனங்களும் சிக்கி தவித்தது.

அதனை கண்ட சேலம் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்த தன்னார்வலர் ஜனகராஜன் உடனடியாக களத்தில் இறங்கி போக்குவரத்தை சீர் செய்து தேங்கி நின்ற வாகனங்களை அனுப்பி வைத்தார். 
ஆண்களைத் தாக்கும் இரைப்பை ஏற்றத்தால் சந்திக்கும் அபாயம் தெரியுமா?

அதனைத் தொடர்ந்து கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தையுடன் இருக்கும் பெண்கள் பொதுமக்கள் சாலையைக் கடக்க நின்ற போது அவர் வாகனத்தை ஒரு நிமிடம் டிராபிக் போலீஸ் போல் நிறுத்தி அவர்களை சாலையை கடக்க உதவி செய்தார்.

மேலும் அந்த பகுதியில் போக்குவரத்து நெருசலை கட்டுக்குள் கொண்டு வந்த தன்னார்வலரின் இந்த செயல் வாகன ஓட்டிகள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings