மயிலாடுதுறை மாவட்டத்தில் சுற்று சூழலை பாதுகாக்க வலியுறுத்தியும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து மஞ்சள் பையை பயன்படுத்த வலியுறுத்தியும்
செம்பனார் கோவில் கீழ மூக்குட்டு பேருந்து நிறுத்தம் அருகே துவங்கிய மாரத்தான் போட்டியை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கொடியசைத்து துவங்கி வைத்தார்.
போட்டியில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி அனைவரும் முன்னதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த மாரத்தான் போட்டியில பிரஜன் என்ற 12 வயது மாணவன் களைப்படைந்த நிலையில்
அவரது தந்தை முருகராஜ் மகனுடன் சேர்ந்து ஓடியும், தாயார் இருசக்கர வாகனத்திலும் சென்று மகனுக்கு களைப்பு தெரியாமல் இருக்க உற்சாகப் படுத்தி ஆர்வத்தை தூண்டினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ் ஒளி மாவட்ட உடற்கல்வி அலுவலர் அப்துல்லா, தரங்கம்பாடி வட்டாட்சியர் சரவணன்,
பேப்பர் ரோஸ்ட் செய்வது எப்படி?
செம்பனார்கோவில் ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுணசுந்தரி, உள்ளிட்ட ஏராளமானோர் துவக்கவிழா நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
Thanks for Your Comments