காஞ்சிபுரம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் பட்டா கத்தி வைத்து மிரட்டி பலரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த மூன்று கொள்ளையர்கள்,
பழைய ரெயில்வே நிலையம் அருகே இரவு பணி முடித்து விட்டு வந்த ஒருவரை அடித்து பட்டா கத்தியால் குத்த முயன்று அவரது செல்போன், பணத்தை பறித்து கொண்டு தப்பி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
காஞ்சிபுரம் வையாவூர் சாலையில் வசித்து வருபவர் உதயகுமார் (22). இவர் இருங்காட்டு கோட்டை உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம்இரவு பணி முடித்து விட்டு நள்ளிரவு 2 மணியளவில் வீடு திரும்பி கொண்டிருந்த போது காமாட்சியம்மன் சன்னதி தெரு பகுதியினை கடந்து
பழைய ரெயில்வே நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மூவர் பட்டாகத்தியை கொண்டு உதயகுமாரை மிரட்டி
இதனை யெடுத்து உதயகுமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கைபற்றி போலீசார் தேடி வந்தனர்.
சிறு குழந்தைகளுக்கான பொது அறிகுறிகள்
அதே போல் கடந்த 7-ஆம் தேதியன்றும் பேருந்து நிலையம் சாலையில் ஆந்திரா சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த அஜிஸ் பாஷாவிடமும் கத்தியை
காட்டி மிரட்டி செல்போன், பணம் ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பி சென்றவர்களும் இவர்கள் என சிசிடிவி காட்சிகளின் மூலம் உறுதி செய்தனர்.
இந்த நிலையில் போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் தாமல்வார் தெரு பகுதி வழியே இம்மூவரும் பைக்கில் சென்று கொண்டிருந்த நிலையில் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
இதனை யெடுத்து இவர்களிடமிருந்து 2 செல்போன்,1 பட்டாகத்தி, அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனம ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதனை யெடுத்து மூவரையும் கைது செய்த சிவகாஞ்சி போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
உடல் எனும் இயந்திரம் நாக்கு !
இதன் மூலம் தொடர்ந்து காஞ்சிபுரம் மாநகர பகுதிகளில் அண்மை நாட்களாக நடைபெற்று வந்த தொடர் வழிபறியில் ஈடுபட்டு வந்தவர்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றனர்.
Thanks for Your Comments