விமான பணிப் பெண்கள் குண்டானால் சம்பளம் குறையும் !

0

விமான பணிப்பெண்ணின் உடல் எடை அதிகரித்தால் அவர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என முன்னாள் விமான பணிப்பெண் கூறிய செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

விமான பணிப் பெண்கள் குண்டானால் சம்பளம் குறையும் !
விமானத்தில் பணி செய்யும் பணி பெண்களை பார்த்துள்ளீர்களா?. விமானத்தில் பயணிக்கும் போது விமான பணி செய்வதற்காக பெண்கள் இருப்பார்கள். 

இவர்களை யெல்லாம் பார்த்தால் மிக நேர்த்தியாக உடை அணிந்து எப்பொழுதும் மேக்கப் போட்டுக் கொண்டு கட்டுப்பாடான உடலமைப்புடன் இருப்பார்கள். 

பார்க்கவே அவ்வளவு அழகான வெளிப்புற தோற்றத்துடன் இருக்கும். இவர்களை பார்க்கும் பொழுது நமக்கு எப்படி இவ்வளவு பொலிவுடன் இருக்கிறார்கள் என தோன்றும். 

ஆனால் உண்மையில் இவர்கள் உடல் எடை கூடினால் இவர்களுக்கு தண்டனைகள் கிடைக்குமாம்.

இது குறித்து எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் மாயா டுகரிக் என்பவர் சமீபத்தில் ஒரு ஊடகத்திற்கு பேட்டி அளித்தார். 

அதில் அவர் விமான பணிப் பெண்களுக்கு உடல் எடை குறித்த மிக கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கும். 

உடல் எடை குறிப்பிட்ட அளவை விட அதிகமாக இருந்தால் அவர்களின் சம்பளம் குறைக்கப்படும் அளவிற்கு மோசமான தண்டனைகள் வழங்கப்படும்.

காளான் சிக்கன் குழம்பு செய்வது எப்படி?

மேலும் அவர் எமிரேட்ஸ் விமானத்திலேயே அதிக நேரம் பயணிக்கும் விமானம் துபாயில் இருந்து நியூஸிலாந்து செல்லும் விமானம் தான். இந்த விமானம் தொடர்ந்து 17 மணி நேரம் பறக்கும். 

விமானபணிப் பெண்கள் குண்டானால் சம்பளம் குறையும் !
இந்த விமானத்தில் செல்லும் விமான பணிப்பெண்கள் பயணம் முழுவதும் தங்கள் அழகை கட்டுக்குள் வைத்திருப்பது சிரமம். 

அதனால் Appearance management program என்ற ஒரு விஷயத்தை அந்த நிறுவனம் வைத்திருக்கிறது. அதன்படி விமான பணிப்பெண்கள் பயணத்தின் போது தொடர்ந்து அதை பின்பற்றுவது கடினம்.

பாகற்காய் காரக் குழம்பு செய்வது எப்படி?

அப்படி இதை பின்பற்றத் தவறினால் அந்த நிர்வாகம் கடுமையான தண்டனைகளை வழங்குகிறது. முக்கியமாக சம்பளத்தில் பிடித்தல் போன்ற தண்டனைகளை கூட வழங்குகிறது என கூறினார். 

இந்த செய்தி இணையத்தில் வெகுவாக பரவி வருகிறது.

Relax Please

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings