சகோதரனைக் காப்பாற்ற உயிரை விட்ட சகோதரிகள் !

0

தேசிய தலைநகர் டெல்லியில், ஆர்.கே.புரம் பகுதியில் இன்று அதிகாலையில் அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று வீட்டுக்குள் நுழைந்து சகோதரிகளை சுட்டுக் கொன்ற சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யிருக்கிறது.

சகோதரனைக் காப்பாற்ற உயிரை விட்ட சகோதரிகள் !
முன்னதாக இன்று அதிகாலை 4 மணியளவில், வீட்டிலிருந்த சகோதரிகளைச் சிலர் துப்பாக்கியால் சுட்டு விட்டதாக தொலைபேசியில் போலீஸுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. 

உடனே போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்த போது, இரண்டு பெண்கள் துப்பாக்கியால் சுடப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். அவர்கள் இரண்டு பேரையும் போலீஸார் மருத்துவ மனையில் சேர்த்தனர். 

இரவுல குளிக்கலாமா? அதனால் என்ன ஆரோக்கிய நன்மை? 

ஆனால் இருவரும் சிகிச்சை பலனலிக்காமல் இறந்து போனார்கள். அம்பேத்கர் பஸ்தி என்ற இடத்தில் நடந்த இந்தத் துப்பாக்கிச்சூடு குறித்து துணை போலீஸ் கமிஷனர் மனோஜ், 

அதிகாலை 4:40 மணிக்கு ஆர்.கே.புரம் அம்பேத்கர் பஸ்தியில் யாரோ தங்களது சகோதரியை துப்பாக்கியால் சுட்டு விட்டதாகக் கூறி போன் வந்தது. 

துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சகோதரிகள் ஜோதி (30), பிங்கி (29) சிகிச்சை பலனலிக்காமல் இறந்து போனார்கள். 

துப்பாக்கியால் சுட்ட முக்கிய குற்றவாளியும், அவனது கூட்டாளியும் கைது செய்யப் பட்டிருக்கின்றனர் என்றார்.

இது குறித்து போலீஸார் மேலும், குற்றவாளிகள் இரண்டு பேரும் கடன் பிரச்னை காரணமாக துப்பாக்கிச்சூட்டில் இறந்த இரண்டு சகோதரிகளின் சகோதரர் லலித் என்பவரைத் தேடி வந்திருக்கின்றனர். 

அவர் கிடைக்காததால் சகோதரிகளைச் சுட்டுக் கொலை செய்திருக்கின்றனர் என்றார். இது குறித்து இறந்தவர்களின் மற்றொரு சகோதரர் லாலா, என்னுடைய அண்ணன் யாருக்கோ கடன் கொடுத்திருந்தார். 

அந்தக் கடனை திரும்ப வாங்க நேற்று சென்றார். அங்கு அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இன்று அதிகாலையில் நாங்கள் உறங்கிக் கொண்டிருந்தோம்.

அதிகாலை 2:10 மணிக்கு யாரோ சிலர் கும்பலாக வந்து, வேகமாக கதவைத் தட்டினார்கள். சிறிது நேரம் கதவைத் தட்டி விட்டுச் சென்று விட்டார்கள். 

என்னுடைய சகோதரனைக் கொலை செய்யும் நோக்கத்தில் அவர்கள் மீண்டும் துப்பாக்கியுடன் வந்தனர். அவர்கள் என்னுடைய சகோதரனைச் சுட முயன்றனர். 

கன்னிப் பெண்ணாக மாற விரும்பும் பெண்கள் !

ஆனால் என்னுடைய சகோதரிகள் அவரைக் காப்பாற்ற முயன்றனர். இதனால் என்னுடைய சகோதரிகள் இரண்டு பேரையும் துப்பாக்கியால் சுட்டு விட்டுத் தப்பி விட்டனர் என்றார். 

இந்தச் சம்பவத்துக்கு டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings