கார் பற்றி நமக்கு தெரியாத சில விஷயங்கள் என்னென்ன?

0

நான் காதலித்த பெண்களில் எனக்கு மிகவும் பிடித்த காதலி கார் தான், உடனே பெண்ணியவாதிகள் பொங்கிடாதீங்க.

கார் பற்றி நமக்கு தெரியாத சில விஷயங்கள் என்னென்ன?
எப்படி ஒரு உயிரற்ற பொருளை பெண்ணோடு ஒப்பிடலாம் என்று, அது அப்படியல்ல ஒரு உயிரற்ற பொருளை ஒரு உயிருள்ள காதலிக்கு நிகராக நான் பார்க்க வேண்டும், 

ஒரு காரை குளிப்பாட்டுவது என்பது ஒரு ஆறு மாத குழந்தையை எப்படி குளிப்பாட்டு வோமோ, அதே கவனத்துடன், அதே அக்கறையுடன் தான், அந்த செயலை செய்ய வேண்டும்.

ஏன் காருக்கு buds கூட உபயோகிப்பேன். ஏசி வெண்டில் துணியை நுழைக்க முடியாது, அதனால் அங்கு இருக்கும் தூசியை பட்ஸ் மூலம் சுத்தம் செய்ய வேண்டும்.

எப்படி நாம் அந்தரங்க பாகங்களில் சோப்பு போட்டு சுத்தமாக குளிக்கிறோமோ, அதே போலத் தான் காரின் உள்ளே அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். 

குறிப்பாக டிரைவர் சீட்டுக்கு பக்கத்தில் உள்ள சீட்டின் அடியில் தூசி, அழுக்கு படியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கார் பற்றி நமக்கு தெரியாத சில விஷயங்கள் என்னென்ன?

ஏனென்றால் அங்கே தான் ஏசி Suction இருக்கிறது. உள்ளிருக்கும் காற்றை உறிஞ்சி, மேலே இருக்கும் ஏசி VENT இல் ஜில் காற்றாக மாறி தருகிறது.

அழகை காட்டி கொள்ளும் ஒரு பெண் எப்படி மாதமொரு முறை ஃபேஷியல் செய்து கொள்வாளோ, அது போல கார்களுக்கு குறைந்தது ஆறு மாதத்துக்கு ஒரு தடவை வேக்ஸ் பாலிஷ் செய்தால் பெயிண்டிங் பொலிவு குறையாமல் புதுசாக இருக்கும். 

மூன்று மாதத்திற்கு ஒரு தடவை கூட செய்யலாம் தப்பில்லை. ஒரு ஆணுறையை எப்போதும் பர்சில் வைத்திருங்கள். 

ஒரு வேளை வண்டி பெட்ரோல் இல்லாமல் நடுவில் நின்று விட்டால் பாட்டிலை தேடி அலைய வேண்டாம். ஒரு ஆணுறையில் குறைந்தது அரை லிட்டர் பெட்ரோல் பிடிக்கும் வரை தன்மை உண்டு, அது அவ்வளவு எளிதிலும் கிழியாது.

முதல் முதலில் காரை உருவாக்கியவர் யார் தெரியுமா?

கார் பற்றி நமக்கு தெரியாத சில விஷயங்கள் என்னென்ன?

பென்ஸ் முதலாளி கார்ல் பென்ஸ், 1885இல் 16 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் காரை உருவாக்கினார். ஹன்ரி போர்ட் உருவாக்கியது 1896 ல்.

இன்றைய நிலவரப்படி உலகத்தில் மொத்தம் 120 கோடி கார்கள் இருக்கின்றன. இது 2040 இல் 200 கோடியாக உயரும். ஒரு காரின் 95% ஆயுள் பார்க்கிங்கில் தான் கழிகின்றன.

அவ்டி, ஸ்கேடா, பென்ட்லி, புக்காட்டி, லம்போர்கினி, போர்ஷே இது எல்லாமே போக்ஸ்வேகன் கம்பேனியின் வண்டிகள்.

ஹன்னாசி வேணம் (Hennessey Venom) இது தான் இன்றைய தேதிக்கு வேகமாக ஓடக்கூடிய கார், மணிக்கு 434 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடிய கார்.

டிரைவர் சீட்டில் தலை வைக்கும் பகுதியான HEAD REST எளிதில் இழுக்கக் கூடிய வகையில் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. 

ஏதேனும் ஒரு சூழ்நிலையில் கதவு திறக்க வில்லை என்றால் அந்த ஹட் ரெஸ்ட் எடுத்து அதில் இருக்கும் கூரான கம்பியின் மூலம் காரின் கண்ணாடியை உடைக்க உதவியாக இருக்கும்.

தூங்கும் போது கடிகாரம் ஏற்படுத்தும் சத்தத்தையும், கேலண்டர் படபடக்கும் சத்தத்தையும், மின்விசிறி ஏற்படுத்தும் சத்தத்தையும் சகிக்காத நாம், 

பஸ்ஸில் போகும் போது அவ்வளவு பெரிய சத்தத்தையும் தாங்கி கொண்டு நாம் தூங்குகிற காரணம்... சோபைட் சின்டோரம் தான் (Sopite Syndrome).

உடம்பு குலுங்கி கொண்டே இருப்பதால் ஏற்படும் கிறக்கம் தான் இந்த சின்டோரம். குழந்தையை தொட்டிலில் போட்டு ஆட்டுவது இதே லாஜிக் தான்.

போதாத குறைக்கு கண்ணாடியை ஏற்றி விட்டு ஏசி போட்டு கொண்டு நீண்ட தூரம் பயணம் செய்வதால் உள்ளேயே சூழ்ந்து கொண்டிருக்கும் கரியமில வாயு அதாவது Carbon dioxide ஒரு வித மயக்கத்தை ஏற்படுத்தும். 

அதனால் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு தடவை வண்டியை கண்டிபாக நிறுத்தி விட்டு சுத்தமான காற்றை சுவாசிக்க வேண்டும்.

அடிக்கடி தண்ணீர் குடிப்பது இரண்டு வகையில் நல்லது. ஒன்று உடலில் தண்ணீரின் அளவு குறையாமல் இருக்கும் ஏசியிலேயே இருப்பதால் உடம்பு dehydrate ஆக வாய்ப்பு இருக்கு. 

இன்னொன்று அடிக்கடி சிறுநீர் வருவதால் வண்டியை நிறுத்தி நிறுத்தி போவதற்கு இது ஒரு நல்ல வழி. நாம் போக வேண்டிய இடத்திற்கு சீக்கிரமாக போவது முக்கியம் தான், ஆனால் அதை விட முக்கியம் உயிரின் பாதுகாப்பு.

உயிரின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் தருவதால் தான் சிலர் LUXURY கார்களின் விலை அதிகமாக இருக்கிறது.

கார் பற்றி நமக்கு தெரியாத சில விஷயங்கள் என்னென்ன?

ஒருமுறை பென்ஸ் காரில் மதுரையில் இருந்து கோயம்புத்தூர் சென்று கொண்டிருந்தேன், ஒரே நேர்கோட்டில் ரொம்ப நேரம் வண்டியை செலுத்திக் கொண்டே இருந்ததால், என் உடம்பில் அவ்வளவாக அசைவில்லை, steering இல் பெருசாக மாற்றம் இல்லை. 

இதை உணர்ந்து கொண்ட அந்த artificial intelligence என்னை வண்டியை நிறுத்துமாறும், காபி குடிக்குமாறும் என்னை வற்புறுத்தியது. அதை நான் புறக்கணித்து மீண்டும் சென்று கொண்டே இருந்தேன்.

கொஞ்ச நேரத்தில் சத்தம் எழுப்ப ஆரம்பித்தது, அதுவாகவே வேகத்தைக் குறைத்தது... இதற்கு மேலும் வண்டியை ஓட்டினால் அசிங்கமாக திட்டி விடும் என்ற பயத்தில் வண்டியை நிறுத்தி காபி குடிக்க சென்றேன்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings