டாஸ்மாக் மது அருந்திய இருவர் மரணம்.. அண்ணாமலை !

0

டாஸ்மாக் மது அருந்திய இருவர் மீண்டும் மரணம் அடைந்துள்ள நிலையில்  10 ரூபாய் வசூலில் மட்டுமே குறியாக இருப்பதாக அண்ணாமலை ஆவேசமாக கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:  

டாஸ்மாக் மது அருந்திய இருவர் மரணம்..  அண்ணாமலை !
மயிலாடுதுறை அருகே, டாஸ்மாக் மது அருந்தியதால், மீண்டும் இருவர் மரணம் அடைந்துள்ளதாக நாளிதழில் வந்துள்ள செய்தி மிகவும் அதிர்ச்சி யளிக்கிறது. 

சாராயத்தால் ஏற்படும் மரணங்களுக்கு ஒவ்வொரு முறையும் புதிய காரணங்களைக் கண்டுபிடித்துச் சொல்லும் தமிழக அரசு, இம்முறை என்ன காரணத்தைச் சொல்லப் போகிறது? 

நரபலி கொடுக்கப்பட்ட 140 குழந்தைகள் - எதற்காக? எங்கு நடந்தது தெரியுமா?

பொதுமக்களின் உயிருக்குச் சிறிதும் மதிப்பில்லாத நிலை தமிழகத்தில் நிலவுகிறது. குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காக, கண் துடைப்புக்காக நடவடிக்கை எடுப்பது போல் நடித்ததன் விளைவு, மீண்டும் இரு உயிர்கள்.

உடனடியாக, சம்பந்தப்பட்ட மது ஆலையை மூட வேண்டும் என்றும், தமிழகம் முழுவதும் அந்த ஆலையிலிருந்து கொள்முதல் செய்யப் பட்டுள்ள மது பாட்டில்களைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும், 

மக்கள் உயிரைப் பற்றிக் கவலை யில்லாமல், பத்து ரூபாய் வசூலில் மட்டுமே குறியாக இருக்கும் துறை அமைச்சர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும் தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings