லண்டனில் இந்திய மாணவி ஒருவர் கொல்லப்பட்ட விவகாரத்தில், அவரது தாயார் கடைசியாக தொலைபேசியில் தம்முடன் பகிர்ந்து கொண்ட தகவல்களை வெளிப்படுத்தி யுள்ளார்.
இதில் பிரேசில் நாட்டவரான 23 வயது இளைஞர் கைதாகி யுள்ளார். தேஜஸ்வினியுடன் தங்கியிருந்த இன்னொரு இந்திய மாணவி அகிலா என்பவரும் தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனை சிகிச்சையில் உள்ளார்.
இந்த நிலையில், தமது மகள் கொல்லப்பட்ட சம்பவம் தம்மால் ஏற்கவே முடியவில்லை என அவரது தாயார் ரமாதேவி கண்கலங்கி யுள்ளார்.
மகளின் எதிர்காலம் கருதி லண்டனுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், ஆனால் இப்படியான ஒரு சூழலை எதிர் கொள்வோம் என கனவிலும் எதிர்பார்க்க வில்லை என குறிப்பிட்டுள்ள ரமாதேவி,
மேலும், தமக்கு இது போன்ற ஒரு நிலை ஏற்படும் என தேஜஸ்வினி ஒருபோதும் கூறவில்லை என குறிப்பிட்டுள்ள ரமாதேவி, அவர் மிகவும் தைரியமானவர், யாரிடமும் சண்டை போடும் பழக்கமும் இல்லாதவர் என தெரிவித்துள்ளார்.
கடைசியாக தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதும், பணத்திற்காக மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் நடக்கும் எனவும், ஆனால் பணம் கொடுத்தால் விட்டு விடுவார்கள் எனத் தெரிவித்ததாகவும் ரமாதேவி கூறியுள்ளார்.
பெண்களுக்கு என்னென்ன குறைகள்?
இதுவே கடைசியாக அவர் பேசிய வார்த்தைகள் என ரமாதேவி கூறியுள்ளார். இதனிடையே, தேஜஸ்வினியின் உடலை இந்தியாவுக்கு எடுத்துவரும் முயற்சிகள் முன்னெடுக்கப் படுவதாக தகவல் வெளியாகி யுள்ளது.
Thanks for Your Comments