தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடிகர் வடிவேலுவுடன் நகைச்சுவை காட்சிகளில் தோன்றி ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் தான் நடிகர் பாவா லட்சுமணன்.
ஆனால் இவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் நடிப்புக்கு எண்ட் கார்ட்டும் போட்டு விட்டார். அதாவது 55 வயதாகும் இவருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது.
அதனால் தான் சமீப காலமாக படங்களில் நடிக்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவருக்கு சர்க்கரை நோய் அதிகமானதால் அவரின் கால் கட்டை விரல் அகற்றப்பட்டு உள்ளது.
இந்நிலையில் இவர் மருத்துவ மனையில் இருந்து ஊடகம் கருத்துத் தெரிவித்து இருக்கின்றார். அந்த வகையில் அவர் கூறுகையில் சில வருடங்களாவே எனக்கு சுகர் பிரச்சினை இருக்கு.
சுகர் கன்ட்ரோல் மீறிப்போனதால, கடந்த பத்து நாளா ஓமந்தூரார் மருத்துவ மனையில் நான் சிகிச்சை எடுத்துக்கிட்டு வர்றேன்.
ஆனா, அந்தக் காயம் சரியாகுறதுக்கு நாலஞ்சி மாசமாகும். ஏற்கெனவே நான் வாழ்வாதாரத்துக்கு வழியில்லாம நண்பர்களோட உதவியால தான் நாட்களை கடத்திட்டிருக்கேன்.
எனக்கு ஆறு மாசமாக எந்தவொரு பட வாய்ப்புகளும் கிடையாது. இப்போ என்னுடைய கட்டை விரலையும் எடுத்துட்டாங்க. இந்த வலியை விட வாய்ப்பு கிடைக்காதது தான் எனக்கு இருக்கிற மிகப்பெரிய வலி.
காயம் எல்லாம் சரியான பிறகு தான் என்னால் வாய்ப்பு தேட முடியும். அதுவும் கிடைக்குமான்னு தெரியல. உதவுறதுக்கு என்னைப் பெத்தவங்களும் உசுரோட இல்ல.
பொதுவாகவே நடிகருங்கன்னா நிறைய சம்பளம் வாங்குறாங்கன்னு தான் எல்லாரும் வெளில நினைக்குறாங்க. என்னை மாதிரி துணை நகைச்சுவை நடிகர்களோட சம்பளம் ரொம்பக் குறைவு தான்.
கம்பெனியைப் பொறுத்து அஞ்சாயிரத்திலிருந்து பத்தாயிரம் வரைக்கும் மட்டும் தான் கொடுப்பாங்க. பட வாய்ப்புகளும் எப்பவாவது தான் எங்களுக்கு வரும்.
இப்படியாக சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் போது, தனியார் மருத்துவமனை யெல்லாம் ஏன்னால் கொஞ்சமும் நினைச்சுக் கூடப் பார்க்க முடியாது. அதனால் தான் அரசு மருத்துவ மனையில் வந்து சேர்ந்தேன்.
இங்க இவங்க எல்லாருமே என்னை நல்லா பார்த்துக்கிறாங்க. ஆனாலும், டிஸ்சார்ஜ் ஆன பிறகு மருந்து, மாத்திரைகள், சாப்பாட்டுச் செலவுன்னு ஏகப்பட்ட செலவு இருக்கு.
இவ்வாறு எங்களை மாதிரி நலிவடைஞ்ச கலைஞர்களுக்கு திரைத்துறையினர் தான் உதவி செய்யணும் என்று கண் கலங்கியவாறு மிகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார் பாவா லட்சுமணன்.
இதனை யடுத்து அவரிடம் உங்கள் மனைவி, பிள்ளைகள் என்ன செய்கிறார்கள்? என்று கேட்ட கேள்விக்கு எனக்கு இப்போ 58 வயசாகுது. திருமணமே பண்ணிக்கல.
புள்ள குட்டின்னு இருந்தா நான் ஏன் உதவி கேட்கப் போறேன். எனக்கு ஒரேயொரு அக்கா தான் இருக்காங்க. அவங்களும் சொல்லிக்கிற மாதிரி யெல்லாம் வசதி கிடையாது.
அதனால் தான், திரைத்துறையினரிடம் உதவியை எதிர் பார்க்குறேன் எனவும் கலங்கிய கண்களுடன் தெரிவித்துள்ளார்.
Thanks for Your Comments