நம் தமிழ்நாட்டில் அரசு சார்ந்த துறைகளில் பணியாற்றுவோரின் அதிகப்பட்ச வயது வரம்பு 60. அதாவது, 60 வயதை நிறைவு செய்தவர்கள் தங்களது உடல்நிலையை கருத்தில் கொண்டும்,
முதல் முறையாக வேலைக்கு சேரும் சமயத்தில் இறுதியில் ஓய்வுத் தொகை கிடைக்கும் என்பது சந்தோஷமான விஷயமாக தெரியலாம்.
தஞ்சை பெரிய கோவில் தகவல்கள் - நம்ப முடியாதது !
ஆனால் ஓய்வு காலக்கட்டத்தை எட்டும் தருவாயில், ஓய்வுத்தொகை கூட வேண்டாம்... என்னை இன்னும் சில காலத்திற்கு பணி செய்ய அனுமதியுங்கள் என்பதே பல அரசு ஊழியர்களின் ஆசையாக மாறிவிடும்.
ஏனெனில், 20 - 30 ஆண்டுகளாக ஒரே வேலையை செய்யும்போது நம்மை அறியாமலேயே அந்த வேலைக்கு நம்மை முழுமையாக அர்பணித்து விடுவோம்.
அந்த வகையில், மதுரை திருப்பரங்குன்றத்தில் அரசு பேருந்து ஓட்டுனர், தான் 30 ஆண்டு காலமாக இயக்கி வந்த அரசு பேருந்தை கட்டி தழுவி பிரியா விடைப்பெற்று சென்றுள்ளார்.
ஓய்வு பெற்றுள்ள இந்த அரசு பேருந்து ஓட்டுனரின் பெயர் முத்துப்பாண்டி ஆகும். பைக்காரா என்ற பகுதியை சேர்ந்தவரான இவர்
மதுரை திருப்பரங்குன்றம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் கடந்த 30 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார்.
தான் ஓய்வு பெறும் நாளிலும் கடைசியாக ஒரு முறை பொதுமக்களை ஏற்றி கொண்டு பேருந்தை இயக்கிய முத்துப்பாண்டி கடைசியாக பேருந்தை டிப்போவில் கொண்டு வந்து நிறுத்தி விட்டு வணங்கி முத்தமிட்டு,
ஈசான்ய மூலை என்பது எது?
கட்டி தழுவி கண்ணீர் ததும்ப, தன் வாழ்வில் பெற்ற திருமணம், சமூகத்தில் மதிப்பு, கிடைத்த பயன்களை பேருந்திடம் எடுத்துக் கூறி, பணி ஓய்வு பெறுவதாக அதனிடம் தெரிவித்துள்ளார்.
அதன் பின், சக ஊழியர்களிடமும் தனது நன்றியை தெரிவித்த முத்துப்பாண்டி திருப்பரங்குன்றம் - மகாலட்சுமி காலனி செல்லும் வழித்தட எண் 31-ஏ கொண்ட அரசு பேருந்தை இயக்கி வந்தார்.
Thanks for Your Comments