என்னை விஜய் அழைக்காதது ஏன்? கண்ணீருடன் மாணவி !

1 minute read
0
அதிக மதிப்பெண்கள் எடுத்த தன்னை விஜய் அழைக்கவில்லை என கண்ணீருடன் மாணவி கூறியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 
என்னை விஜய் அழைக்காதது ஏன்? கண்ணீருடன் மாணவி !
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் முதல் மூன்று மதிப்பெண் எடுத்த 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு இன்று நடிகர் விஜய் சிறப்பு பரிசு வழங்கினார். 

இந்த நிலையில் தான் 12 ஆம் வகுப்பில் 600க்கு 597 மதிப்பெண் பெற்றிருப்பதாகவும் அப்படி பார்த்தால் தான் மூன்றாவது இடம் வந்திருப்பதாகவும் ஆனால் தன்னை விஜய் ஏன் அழைக்கவில்லை என்றும்,
விழா நடந்த இடத்தின் வாசலில் பிளஸ் டூ மாணவி ஒருவர் கண்ணீருடன் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் உடன் வாதம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. 
பின்னர் இதனை அடுத்து ஒரு சில தவறுகளால் இது நேர்ந்திருக்கலாம் எனவே இரண்டு நாட்கள் கழித்து நீங்கள் பனையூர் அலுவலகத்திற்கு சென்று விஜய்யை நேரில் சந்தித்து அவரிடம் நேரில் கூறுங்கள், 

உங்களுக்கு கண்டிப்பாக பரிசு கிடைக்கும் என்று அந்த மாணவி மற்றும் அவருடைய தாயாருக்கு ஆறுதல் கூறி விஜய் மக்கள் இயக்கத்தினர் அனுப்பி வைத்தனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 19, March 2025
Privacy and cookie settings