இங்கிலாந்தில் பெரிய மார்பகங்கள் உடைய பெண்கள் தங்களது அனுபவங்களை இந்த இரண்டு வார்த்தைகளில் தான் விவரித்தனர். ஒன்று வலி, மற்றொன்று அவமானம்!
இங்கிலாந்தைச் சேர்ந்த ஜாக்கி அதிதேஜி என்னும் பெண், தன்னுடைய பெரிய மார்பகங்களால் தான் கேலியாகவும் கொச்சையாகவும் பார்க்கப் படுவதாக வேதனையுடன் கூறுகிறார்.
பெரிய மார்பகங்கள் உடைய பெண்ணின் நிலை குறித்து அவர் பேசும் போது, இங்கே ஒரு பெண்ணின் மார்பக அளவு 36k ஆக இருந்தால், அவள் நிச்சயம் வாழ்க்கையில் ஓடி ஒளியதான் வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.
வயிறு செய்யும் வேலைகள் என்ன?
அவர் தொடர்ந்து பேசுகையில், 11 வயதிலிருந்து நான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகிறேன்.
நான் சிறுவயதில் பள்ளிக்கு சென்றுக் கொண்டிருக்கும் போது பல வளர்ந்த ஆண்கள், என்னை பார்த்து கொண்டே அவர்களின் உதட்டை நக்குவது போன்ற கொச்சையான செயல்களில் ஈடுபடுவார்கள்.
இப்படி எத்தனையோ கசப்பான நினைவுகள் என் மனதில் இருக்கின்றன என்று கூறுகிறார். அலுவலக மீட்டிங்கின் போது கூட சக ஊழியர்கள் உங்களை பாலியல் ரீதியாக நோட்ட மிடுவதை உங்களால் உணர முடியும்.
ஆனால் இங்கிலாந்தில் உள்ள மற்ற பெண்கள் அனைவராலும் இப்படியான மனநிலைக்கு பக்குவப்பட முடியவில்லை. அங்கே பெரும்பாலான பெண்கள் அறுவை சிகிச்சைக்குச் செல்கின்றனர்.
இங்கிலாந்தில் பெரிய மார்பகங்கள் கொண்டிருக்கும் பெண்கள் மன ரீதியாக எவ்வளவு தூரம் பாதிக்கப் படுகிறார்கள் என்பதை அவர்கள் இடத்தில் இருந்து பார்த்தால் தான் தெரியும் என்கிறார் ஜாக்கி.
உங்கள் மார்பகங்கள் பெரிதாக இருக்கும் போது, அதன் மீது பலரும் உரிமை எடுத்து கொள்ள முயல்கிறார்கள். அதை பொதுமக்களுக்கு சொந்தமான ஒரு பொருளாக பார்க்கிறார்கள்.
உடலில் தேவையற்ற உடல் பாகங்கள் !
இதனால் அந்த பெண்கள் மிகவும் அவமானமாக உணர்கிறார்கள் என்றும் ஜாக்கி குறிப்பிடுகிறார்.
பெரிய மார்பகங்களை கொண்டிருப்பதால் மத ரீதியாகவும் பல தடங்கல்களை சந்திக்க வேண்டி யிருக்கிறது என்றும் தன் அனுபவம் குறித்து அவர் பகிர்கிறார்.
கறுப்பினத்தைச் சேர்ந்த பெண்ணாக இருப்பவர், எப்போதும் ஒரு நேர்மறையான எண்ணங்களுடன், நேர்த்தியாக தன்னை பொது வெளியில் காட்டிக் கொள்ள வேண்டி யிருக்கிறது.
ஆனால் இந்த பெரிய மார்பகங்களால் நேரும் சங்கடங்களினால், என்னால் அப்படி இருக்க முடியவில்லை என்று ஜாக்கி கூறுகிறார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த ஆம்பர் என்ற பெண்ணும் இதே போன்ற சங்கடங்களை எதிர் கொண்டார். அதனால் 2022 ஆம் ஆண்டிற்கு பிறகு அவர் தனியாக வாழ்வதற்கு முடிவு செய்தார்
அவருடைய மார்பக அளவு 36L ஆக இருந்திருக்கிறது. இதனால் மனம் மற்றும் உடல் என இரு வகையிலும் அவர் சோர்வடைந் திருக்கிறார்.
சிறு வயதிலிருந்தே இதனால் நான் பல கஷ்டங்களை அனுபவித் திருக்கிறேன். குறிப்பாக என்னுடைய குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க ஆரம்பித்தப் பிறகு என்னுடைய வலிகள் அதிகரித்தன.
தன்னுடைய கணவரிடம் நீண்ட ஆலோசனையை மேற்கொண்ட பிறகு, அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என முடிவு செய்தார் ஆம்பர்.
இதற்காக அவர் தனியார் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருந்தது. மார்பக அளவை குறைக்கும் அறுவை சிகிச்சைக்காக அவர் அதிகமான பணத்தை செலவு செய்ய வேண்டி யிருந்தது.
சிக்கலான உறுப்பான மூளையைப் பற்றித் தெரிந்து கொள்ள !
பணத்திற்காக நிறையக் கடனும் வாங்கி யிருக்கிறார். ஆனால் அறுவை சிகிச்சை செய்து கொண்டது தான் வாழ்வின் மிகச் சரியான முடிவு என அவர் நம்புகிறார்.
இவர்களை போலவே 36HH என்ற மார்பக அளவை கொண்டிருந்த ரேச்சல் என்ற பெண்ணும், பெரிய மார்பகங்களினால் உடல் ரீதியாக பல சவால்களை சந்தித்திருக்கிறார். பெரிய மார்பகங்களினால் அவருக்கு கடுமையான முதுகு வலி ஏற்பட்டிருக்கிறது.
அதற்காக நிறைய வலி நிவாரணி மருந்துகளை உட்கொண்ட அவர், ஒரு கட்டத்தில் சோர்ந்து போனார். இதனால் மனதளவிலும் அவருக்கு பாதிப்பு ஏற்பட்டது. மனச்சோர்வினால் உடைந்து போனார்.
பத்து ஆண்டுகால போராட்டத்திற்கு பின் அவரும் அறுவை சிகிச்சைக்குச் சென்றார். அது அவருக்கு உதவி செய்தது.
முன்பை விட இப்போது நான் அதிக தன்னம்பிக்கையுடன் இருக்கிறேன் என்று ரேச்சல் கூறுகிறார்.
மார்பக அறுவை சிகிச்சைகள் என்பது அழகு சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சைகளாக கருதப்பட்டாலும், இது உண்மையில் பல பெண்களுக்கு உடல் அளவில் அவர்கள் எதிர் கொள்ளும் பல தொந்தரவு களிலிருந்து விடுபெற உதவி செய்கிறது.
காதுகளை பராமரிப்பதில் அலட்சியம் வேண்டாம் !
பல பெண்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கிறது, மனதளவில் சோர்ந்திருக்கும் பெண்களுக்கு உத்வேகத்தை அளிக்கிறது. இதன் காரணமாக சமீப ஆண்டுகளில் இத்தகைய சிகிச்சை முறைகள் பெரிதும் பேசப்படுகின்றன.
Thanks for Your Comments