120 பெண்களை பலாத்காரம் செய்த ஜிலேபி பாபா.. 14 ஆண்டு சிறை !

0

ஜிலேபி பாபா என அழைக்கப்படும் அமர்புரி சாமியார், 120 பெண் சீடர்களுக்குப் போதைப் பொருள்களைக் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 14 ஆண்டுகள் தண்டனை விதித்து ஹரியானா நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. 

120 பெண்களை பலாத்காரம் செய்த ஜிலேபி பாபா.. 14 ஆண்டு சிறை !
அரியானா மாநிலம், தோஹானா மாவட்டத்தில் உள்ள பாபா பாலகினாத் கோயில் குருக்களாக இருந்தவர் அமர் புரி என்ற ஜிலேபி பாபா. 

சாமியாராக மாறுவதற்கு முன்பு, தோஹானாவின் ரயில்வே சாலை பகுதியில் ஜிலேபி விற்று வந்ததால், அவரை அனைவரும் ஜிலேபி பாபா என்றழைத்தனர். இவர் மீது பல்வேறு பாலியல் ரீதியான வழக்குகள் இருந்தன.

உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற சத்துக்கள் நிறைந்த இறால் !

ஜிலேபி பாபா ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்குவதற்கு முன்பு அவருக்குப் போதை வஸ்துகளை கொடுத்து சுய நினைவை இழக்கச் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். 

தந்திர வித்யா சடங்குகளின் போது, அவர் பெண்களை மயக்கமடையச் செய்து, பின்னர் அவர்களை வன்புணர்வு செய்து வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார். 

அத்தோடு, வீடியோக்களை கசிய விடுவதாக மிரட்டி தன்னுடன் உடலுறவில் ஈடுபடும்படி வற்புறுத்தி யுள்ளார். ஜிலேபி பாபா ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ளும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

அமர்புரி என்றழைக்கப்படும் இவர் சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாப் மாநிலம், மான்சா நகரிலிருந்து தோஹானாவுக்கு குடிபெயர்ந்துள்ளார். அவரது மனைவி இறந்து விட்டார். 

நான்கு பெண் குழந்தைகளும், இரண்டு ஆண் குழந்தைகளும் ஜிலேபி பாபாவுக்கு உள்ளனர். இந்த நிலையில் அவர் 13 ஆண்டுகளாக, ஒரு ஜிலேபி கடையை நடத்தி வந்தார். 

பின்னர் அங்கு வந்த ஒருவரிடம் இருந்து தந்திர மந்திரத்தைக் கற்றுக் கொண்ட அமர்வீர், சில ஆண்டுகளாக தோஹானாவில் இருந்து தலைமறைவாகி உள்ளார். 

பின்னர் தோஹனாவுக்கு திரும்பிய அவர் ஒரு கோயிலுடன் ஒரு வீட்டைக் கட்டி வழிபாடுகளை செய்து வந்தார். அதன் பிறகு பல பெண்கள் ஜிலேபி பாபாவை பின் பற்றத் தொடங்கி இருக்கிறனர். 

அவரை ஜிலேபி பாபா என்றும் அழைக்கத் தொடங்கி இருக்கின்றனர். இதற்கிடையே கடந்த 2018 ஆம் ஆண்டு கோவிலுக்குள் பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. 

அதைத் தொடர்ந்து அவரது சித்து வேலைகளைப் பல பெண்களிடம் காட்டி பலரை தன் வலையில் விழவைத்து அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோ எடுத்து மிரட்டி வந்துள்ளார்.

இந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து பல பாதிக்கப்பட்ட பெண்களின் வீடியோக்கள் கைப்பற்றப் பட்டதை அடுத்து அவரை குற்றவாளி என ஹரியானா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

அவருக்கு தற்போது 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கப் பட்டுள்ளது. 

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings