கடல் 200 அடிக்கு உள்வாங்கியது... வியப்பில் மக்கள் !

0

திருச்செந்தூர் கடற்கரை பகுதிகளில் கடல் உள்வாங்குவதும், பின்னர் இயல்பு நிலைக்குத் திரும்புவதுமாக உள்ளது. 

கடல் 200 அடிக்கு உள்வாங்கியது... வியப்பில் மக்கள் !
திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில், கடல் நீர் 200 மீட்டர் தூரத்துக்கு திடீரென உள்வாங்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடாகப் போற்றப் படுகிறது 

அருள்மிகு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். தென் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குத் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து கடற்கரையில் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

குறிப்பாக, சனி, ஞாயிறு, பௌர்ணமி, அமாவாசை மற்றும் முருகனுக்கு உகந்த நாட்களாகக் கருதப்படும், செவ்வாய் மற்றும் பங்குனி உத்திரம் நாட்களில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இந்த நிலையில், இன்று திருச்செந்தூரில் கோவில் எதிரே உள்ள கடற்கரை பகுதியில், திடீரெனக் கடல் 200 மீட்டர் தூரம் உள்வாங்கியது. இதனால், கடலில் இருந்த பாறைகள், மணல் திட்டுகள் வெளியே தெரிந்தன. 

அலைகள் இல்லாமல் போனதால், கடல், குளம் போல் காட்சி தந்தது. இதைக் கண்டு கோவிலுக்கு வந்த பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். 

உங்கள் மேக்கப்பை கச்சிதமாக்க ஒரு செல்லோடேப் போதும் !

திருச்செந்தூர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் கடந்த சில மாதங்களாக  கடல் உள்வாங்குவதும், பின்னர் இயல்பு நிலைக்குத் திரும்புவதுமாக உள்ளது. இதே போல, புகழ் பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியிலும் இன்று காலை கடல் நீர் உள்வாங்கியது. 

இதனால், விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையைப் பார்க்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings