துபாயில் பணிபுரியும் இந்தியக் கட்டிடக்கலை நிபுணர் ஒருவர், ஐக்கிய அமீரகத்தின் புதிய மெகா பரிசை அப்படியே அள்ளியுள்ளார். இதன் மூலம் அவருக்கு அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 5.5 லட்ச ரூபாய் கிடைக்குமாம்.
அதாவது துபாய்க்குச் சென்று, அங்கே கட்டிடக்கலை நிபுணராக பணிபுரியும் இந்தியர் ஒருவருக்கு மெகா லக் அடித்துள்ளது. இதன் மூலம் அங்கு அறிமுகப் படுத்தப்பட்ட மெகா ஜாக்பாட்டிற்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.
டிக்டாக்' பிரபலங்களுக்கு என்னதான் பிரச்னை? மனநோயின் வெளிப்பாடா?
இதன் மூலம் அவருக்கு அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 5.5 லட்ச ரூபாய் கிடைக்குமாம். இந்தியருக்கு ஜாக்பாட்: இதன் மூலம் ஓவர் நைட்டில் அவரது வாழ்க்கை ஒட்டு மொத்தமாக மாறியுள்ளது.
இந்த மெகா ஜாக்பாட்டை முகமது அதில் கான் என்பவர் வென்றுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இவர், வேலைக்காக ஐக்கிய அமீரகத்திற்குச் சென்றுள்ளார்.
அங்கே அவர் சமீபத்தில் லாட்டரியை வாங்கிய நிலையில், அதில் தான் அவருக்கு இந்த மெகா ஜாக்பாட் கிடைத்துள்ளது. கடந்த வியாழக்கிழமை நடந்த ஃபாஸ்ட் 5 டிராவில் தான் இவர் வெற்றியாளராக அறிவிக்கப் பட்டார்.
இவர் துபாயில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் இன்டீரியர் டிசைன் ஆலோசகராகப் பணிபுரிந்து வருகிறார்.
இந்த மெகா லாட்டரியை வென்றதன் மூலம் இனி அடுத்த 25 ஆண்டுகளுக்கு அவருக்கு ஒவ்வொரு மாதமும் 25,000 திர்ஹாம் (அதாவது ரூ. 5,59,822) கிடைக்கும்.
இப்போது எனது குடும்பத்திற்காக நான் மட்டுமே சம்பாதித்து வருகிறேன். கொரோனா பெருந்தொற்று காலத்தில் எனது சகோதரர் உயிரிழந்து விட்டார்.
இப்போது அவரது குடும்பத்தையும் நான் தான் கவனித்து வருகிறேன். எனக்கு வயதான பெற்றோரும் ஐந்து வயது மகளும் உள்ளனர். எனவே இப்போது எனக்கு இந்த கூடுதல் பணம் கிடைப்பது ரொம்பவே நல்லது.
(getCard) #type=(post) #title=(You might Like)
மெகா லாட்டரியை நான் வென்றதை என்னால் முதலில் நம்பவே முடியவில்லை எனது குடும்பத்தினரிடம் இது குறித்துச் சொன்ன போது.. அவர்களாலும் இதை நம்பவே முடியவில்லை. பல முறை உறுதி செய்த பிறகு அவர்கள் நம்பினார்கள் என்று அவர் தெரிவித்தார்.
ஏன் இப்படி: இது தொடர்பாக இந்த மெகா லாட்டரி டிராவை ஏற்பாடு செய்த டைச்செரோஸ் நிறுவனத்தின் தலைவர் பால் சேடர் கூறுகையில், இந்த ஃபாஸ்ட் 5 லாட்டரி கடந்த 8 வாரங்களுக்கு முன்பு அறிமுகப் படுத்தப்பட்டது.
இதன் காரணமாகவே இதை நாங்கள் ஃபாஸ்ட் 5 என அழைக்கிறோம். வெற்றியாளர் பணத்தை ஒரேயடியாகச் செலவு செய்துவிடக் கூடாது. அவர்களைப் பாதுகாக்கவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம்.
இதன் மூலம் அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் வெற்றியாளருக்குப் பணம் கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார்.
Thanks for Your Comments