எந்த துறையிலும் இல்லாத அளவுக்கு சினிமாவில் அதிக சம்பளம் கொடுக்கிறார்கள். ஹீரோ எனில் சொல்லவே தேவையில்லை. மார்க்கெட் நிலவரத்துக்கு ஏத்தபடி கோடிகளில் சம்பளம் கிடைக்கும்.
தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோர் ரூ.30 கோடி வரையும், விஜய் சேதுபதி ரூ.15 கோடி வரை சம்பளம் பெறுகிறார்கள்.
சிக்கன் ஸ்டஃப்டு பரோட்டா செய்வது எப்படி?
ஒரு பக்கம் சின்ன நடிகர்கள் கூட சில கோடிகளில் சம்பளம் கேட்கிறார்கள் என்பது தான் ஆச்சர்யமாக இருக்கிறது. சில லட்சங்களை சம்பளமாக பெற்றுவந்த நடிகர்கள் கூட ஒருபடம் ஹிட் கொடுத்து விட்டால் கோடிகளில் சம்பளத்தை உயர்த்தி விடுகிறார்கள்.
விஜய் டிவி சீரியல்களில் நடித்து வந்தவர் கவின். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமும் பிரபலாமானார். நட்புன்னா என்னன்னு தெரியுமா, லிஃப்ட்,டாடா என சில படங்களில் நடித்தார்.
அதே போல, சமீப காலமாக சமூக வலை தளங்களில் அதிகம் பார்க்கப்படும் வீடியோ நடிகர் மணிகண்டனுடையது. சிறந்த மிமிக்ரி கலைஞரான இவர் ரஞ்சித் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார்.
சூர்யா தயாரித்து நடித்த ஜெய்பீம் திரைப்படத்தில் இருளராக வந்த மணிகண்டனின் நடிப்பு பலரையும் அதிர வைத்தது. அதே போல், அவரின் மிமிக்ரி வீடியோக்களும் சமூக வலை தளங்களில் வெளியாகி வைரலானது.
அவரின் நடிப்பில் வெளியான குட்நைட் என்கிற திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து மணிகண்டன் தனது சம்பளத்தை ரூ.2 கோடியாக உயர்த்தி விட்டார்.
சுவையான முள்ளங்கி பரோட்டா செய்வது எப்படி?
அதே போல், பியார் பிரேமா காதல், தாராள பிரபு ஆகிய படங்களில் நடித்த ஹரிஸ் கல்யாண் தனது சம்பளத்தை ரூ.1.5 கோடியாக உயர்த்தி விட்டாராம்.
இவர்களை போலவே திரையுலகில் வளர்ந்து வரும் பல நடிகர்களும் ஒரு படம் கொஞ்சம் ஓடி விட்டால் கோடிகளில் சம்பளம் கேட்பது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Thanks for Your Comments