உண்ணியால் கை, கால்களை இழந்து அவதிப்படும் அமெரிக்கர் !

0

அமெரிக்கா நாட்டில் உள்ள டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த மைக்கேல் கோல்ஹோஃப் என்பவருக்கு கடந்த மாதம் உண்ணி ஒன்று கடித்துள்ளது. 

உண்ணியால் கை, கால்களை இழந்து அவதிப்படும் அமெரிக்கர் !
இதனால், அவருக்கு காய்ச்சல் மற்றும் வயிற்று உபாதைகள் ஏற்பட்டு உடல்நிலை வேகமாக மோசமடைந்து வந்தது. மேலும், அவரால் படுக்கையில் இருந்து எழுந்திருக்க முடியாத நிலை ஏற்பட்டது. 

இதையடுத்து மைக்கேல், சிகிச்சைக்காக சான் அன்டோனியோ பகுதியில் உள்ள ஒரு மருத்துவ மனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டார். இருப்பினும் அவரது உடல் உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கின.

இதையடுத்து மைக்கேல் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். பின்னர் மருத்துவர்கள் நோய்க்கான காரணத்தை கண்டறியும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். 

இதைத் தொடர்ந்து மைக்கேலுக்கு வென்டிலேட்டர் மற்றும் ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுக்கப்பட்டு, டயாலிசிஸ் தொடங்கப்பட்டது.

(getCard) #type=(post) #title=(You might Like)

சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் போதே, மைக்கேலுக்கு உடலில் பல இடங்களில் ரத்த ஓட்டம் நின்றதனால் அவருக்கு கேங்க்ரீன் எனப்படும் திசுக்கள் இறக்கும் நிலை ஏற்பட்டது. 

இதன் காரணமாக அவருடைய கால் விரல்கள், அவரது கால்களில் ஒரு அங்குலம் மற்றும் கைகளில் முழங்கை வரை துண்டிக்கப் பட்டது.

இந்த கொடிய நோய் தொற்று பாதித்த உண்ணிகளில் உள்ள டைபஸ் எனும் பாக்டீரியா மூலமாக பரவுவது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அனைவரிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings