ஆங்கிலத்தில் கேஸ் லைட்டிங் என்று சொல்லப்படும் உளவியல் பிரச்சனையை பலரும் சமீப காலமாக பேசி வருகின்றனர்.
இதில் ஸெல்ப்-கேஸ் லைட்டிங் என்பதும் ஒரு பெரிய பிரச்சனையாக உருவாகலாம். ஒருவர் தான் செய்ய கூடிய எல்லா வகையான செயல் பாடுகளுக்கும் தான் தான் காரணம் என்று எண்ணிக் கொண்டு, தன்னையே காயப்படுத்த கூடியதைக் குறிக்கிறது.
இதில் தனிநபர்கள் தன்னைப் பற்றி எதிர் மறையான நினைக்கிறார்கள் என்றும், தன் நம்பிக்கையின்மை ஏற்படும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மற்றவர்களின் செயல்பாடுகள் காரணமாக தன்னால் இதை செய்ய முடியவில்லை என்றும், நடக்கின்ற பிரச்சினைகளுக்கு தான் தான் காரணம் என்பது போல எண்ணிக் கொண்டு தன்னையே காயப்படுத்திக் கொள்வார்கள்.
மேலும், தனது பண்பு, தன்னிடம் உள்ள சிறிய குறைகளை கூட பெரிதாக எண்ணுதல், அடிக்கடி தனது சொந்த யதார்த்தத்தை சந்தேகிப்பது, தன்னைக் குறைவாக மதிப்பிடுவது போன்றவையும் கேஸ் லைட்டிங்கில் அடங்கும்.
நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்று கருதுவது:
உங்களை நீங்கள் ஸெல்ப்-கேஸ் லைட்டிங் செய்கிறீர்கள் என்பதை அறிவதற்கான முதல் அறிகுறி இது தான்.
அதாவது, உங்களைச் சுற்றியுள்ள விஷயங்கள் நீங்கள் திட்டமிட்ட படி நடக்காத போது அல்லது அந்த சூழ்நிலைகளால் யாராவது பாதிக்கப் பட்டால், அவை அனைத்திற்கும் காரணம் நீங்கள் தான் என்று உங்கள் மீது நீங்கள் பழி சுமத்துவீர்கள்.
(nextPage)
சுய பேச்சு மற்றும் முட்டாள் என குறிப்பிடுவது:
அத்துடன், எந்தவொரு விரும்பத்தகாத சம்பவத்திலும், நீங்கள் செய்தது தான் தவறு என்று எண்ணி நீங்களே உங்களை முட்டாளாக கருதி கொள்வது இந்த பிரச்சினையின் ஒரு முக்கிய அறிகுறியாக உள்ளது.
நொறுங்கும் எலும்புகள் - ஆஸ்டியோ போரோசிஸ் !
உங்கள் திறன்களை குறைத்து மதிப்பிடுதல்:
நீங்கள் எவ்வளவு திறமை சாலியாக இருந்தாலும், உங்களுக்கு எந்தத் திறமையும் இல்லை யென்றாலும்,
நீங்கள் திறமையற்றவர் என்றும் நினைப்பது உங்களது தன்னம்பிக்கையைக் குறைப்பதுடன், உங்களை நீங்களே மனதளவில் காயப்படுத்தி கொள்ளும் பாதிப்புக்கு உட்படுத்துகிறது என்று சிகிச்சையாளர் ரமணி குறிப்பிட்டுள்ளார்.
எல்லா நேரத்திலும் மன்னிப்பு கேட்பது:
எனவே, நீங்கள் பொறுப்பேற்காத செயலுக்காக நீங்கள் தொடர்ந்து மன்னிப்பு கேட்கும் போது, இது ஒரு கேஸ் லைட்டிங் பிரச்சனையின் அறிகுறியாக கருதப் படுகிறது.
குதிகால் வலியை விரட்டும் வெந்நீர் !
உங்கள் சாதனைகளை குறைத்து கொள்வது:
இது பெரும்பாலும் தாழ்வு மனப்பான்மையுடன் குழப்பி கொள்கிறோம். இருப்பினும், சிகிச்சையாளர் ரமணி கூறுகையில், ஒருவர் தான் செய்கிற பெரிய சாதனைகளை கூட மதிப்பற்றதாக எண்ணி கொள்வது,
அவற்றில் குறைகளை கண்டுபிடிப்பதும், தன்னால் சாதிக்க முடியவில்லை என்று புலம்புவதும் இந்த மனநல பிரச்சினையின் ஒரு முக்கிய அறிகுறியாக குறிப்பிடுகிறார்.
Thanks for Your Comments