கடலூரில் எருமை மாடுக்காக நடந்த பாசப்போராட்டம் !

0

கடலூரில் உள்ள சிதம்பரம் வீரசோழன் கிராமத்தைச் சேர்ந்த தீபா என்பவர் 3 மாதங்களுக்கு முன்பு திருடுபோன தனது எருமை மாட்டை, பழனிவேல் பிடித்து வைத்திருப்பதாகப் போலீசில் புகார் அளித்தார். 

கடலூரில் எருமை மாடுக்காக நடந்த பாசப்போராட்டம் !
ஆனால், பழனிவேலோ, தனது உறவினரிடம் வாங்கி பல மாதங்களாக வளர்த்து வருவதாக போலீசாரிடம் கூறினார். இதனால் போலீசார், மாட்டுக்கு டெஸ்ட் வைத்து பிரச்சனையை தீர்த்து வைத்தனர்!

அதில், ஒரே எருமை மாட்டிற்கு 2 பேர் சொந்தம் கொண்டாடியதால், குழப்பமடைந்த போலீசார் மாடு யாரிடம் அதிக பாசம் காட்டுகிறது என டெஸ்ட் வைத்த போது, மாடு இருவரிடமும் பாரபட்சமின்றி பாசம் காட்டியதால் முதலில் குழப்ப மடைந்தனர். 

ஆட்டுக்கால் பாயா கிரேவி செய்வது எப்படி?

அதன் பின் பழனிவேல் என்பவர் சைகை செய்த உடன், மாடு அவருடன் சென்றது. இதனால் குற்றச்சாட்டப் பட்டவரை அந்த மாட்டுக்கு உரிமையானவர் எனத் தீர்ப்பு வழங்கப் பட்டதால், புகார்தாரர் தீபா விரக்தி அடைந்தார்,

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings