இந்தியர்களுக்காக அடித்துக் கொண்ட நிறுவனம்.. கிடுக்குபிடி போட்ட சுந்தர் பிச்சை !

0

உலகின் முன்னணி டெக் நிறுவனங்கள் மத்தியில் தற்போது இருக்கும் முக்கியமான போட்டி செயற்கை நுண்ணறிவு துறையில் தான். 

இந்தியர்களுக்காக அடித்துக் கொண்ட நிறுவனம்.. கிடுக்குபிடி போட்ட சுந்தர் பிச்சை !
வெப் சர்ச் முதல் விளம்பர வருவாய் வரையில் AI ஆதிக்கம்  இருக்கும் காரணத்தால் இத்துறையில் போட்டிப்போடும் கூகுள், மைக்ரோசாப்ட், ஆப்பிள் மத்தியிலான போட்டி சற்று கூடுதலாகவே இருக்கும் வேளையில், 

2 இந்திய உயர்களுக்காக ஆப்பிள், கூகுள் அடித்துக் கொள்கிறது என்பது தான் டெக் உலகில் முக்கிய விவாதமாக உள்ளது.

போதைக்காகப் பயன்படும் இருமல் மருந்து?

மைக்ரோசாப்ட் நிறுவனம் AI துறையில் முன்னோடியாக இருக்கும் ChatGPT-ஐ உருவாக்கிய OpenAI நிறுவனத்தில் 10 பில்லியன் டாலருக்கும் அதிகமாக தொகையை முதலீடு செய்து 

தனது தேவையான அனைத்து தொழில்நுட்ப சேவைகளையும், தொழில் நுட்பத்தையும் OpenAI நிறுவனத்திடம் இருந்து பெற்று வருகிறது. 

ஆனால் கூகுள், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அப்படியில்லை, அனைத்தையும் சொந்தமாக உருவாக்க வேண்டும். இதற்கு திறன்வாய்ந்த ஊழியர்கள் அவசியம்.

AI துறையில் முன்னோடியாக இருக்கும் 3 இன்ஜினியர்கள் தற்போது ஹாட் டிமாண்ட் ஆக உள்ளனர். 

ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் இந்த 3 பேரையும் ஈர்ப்பத்தில் மிகவும் ஆர்வமாக உள்ளது, இந்த மூவரும் ஏற்கனவே ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றி யுள்ளனர். 

தற்போது கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். சீனிவாசன் வெங்கடாச்சாரி, ஸ்டீவன் பேக்கர் மற்றும் ஆனந்த் சுக்லா ஆகியோர் இரண்டு நிறுவனங்களிலும் பணிபுரிந்துள்ளனர். 

முதலில் ஆப்பிள் சர்ச் தொழில்நுட்பத்தில் பணியாற்ற தொடங்கி, பின்னர் கூகுள் நிறுவனத்தின் large-language models-ல் பணியாற்றி வருகின்றனர். 

ChatGPT-ஐ உருவாக்கிய OpenAI நிறுவனத்துடன் போட்டிப்போட கூகுள் உருவாக்கும் கட்டமைப்பு தான் இந்த large-language models. இந்த 3 பேரில் சீனிவாசன் வெங்கடாச்சாரி, ஆனந்த் சுக்லா ஆகியோர் இந்தியர்கள், ஐஐடி கல்லூரி பட்டதாரிகள். 

இதில் சீனிவாசன் ஆப்பிள் நிறுவனத்தை விட்டு ஆக்டோபர் 2022ல் வெளியேறினார், ஆனந்த் நவம்பர் 2022ல் வெளியேறினார்.

வாட்ஸ் அப்பில் கண்ணாடி சொல்லும் மூன்று பாடங்கள் !

சீனிவாசன் வெங்கடாச்சாரி, ஸ்டீவன் பேக்கர் மற்றும் ஆனந்த் சுக்லா ஆகிய மூவரையும் சுந்தர் பிச்சை நேரடியாக தொடர்பு கொண்டு கூகுள் நிறுவனத்தில் சேர்த்துள்ளார். 

இதே வேளையில் டிம் குக் இந்த 3 பேரையும் தக்க வைக்க அனைத்து விதமான முயற்சிகளையும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆனால் சுந்தர் பிச்சை கொடுத்த நம்பிக்கையும் வாய்ப்பையும் நம்பி தற்போது கூகுள் நிறுவனத்தின் large-language models-ல் பணியாற்றி வருகின்றனர்.

இதே வேளையில் எலான் மஸ்க் துவங்க உள்ள புதிய AI ஸ்டார்ட்அப் நிறுவனத்திற்கு கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பிரிவின் கிளை நிறுவனமான DeepMind நிறுவனத்தில் இரு மூத்த ஆராய்ச்சி யாளர்களை தனது நிறுவனத்தில் பணியாற்ற ஈர்த்துள்ளார். 

இந்நிறுவனத்திற்கான செயல்பாடுகளை வேகப்படுத்த 10000 graphics processing units (GPUs) வாங்கியுள்ளார். இது AI மற்றும் high-end graphics செயல்களை செய்யக் கூடிய திறன் கொண்டவை.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings